அநுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகரை நீதிமன்றில் ஆஜராகுமாறு பணிப்பு..

Read Time:3 Minute, 51 Second

இராணுவ வீரர் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி சுட்டுக்கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இராணுவ கப்டன்   மற்றும் சிப்பாயை சிறைச்சாலையில் பிரத்தியேகமான சிறையொன்றில் வைக்குமாறு அநுராதபுரம் நீதிபதி உத்தரவிட்டுள்ளபோதும் அதனை மீறிய அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகர் அநுர சில்வாவை தனிப்பட்ட வகையில் நீதிமன்றில் ஆஜராகுமாறு அனுராதபுரம் நீதிமன்ற நீதிபதி தர்ஷிகா விமலசிறி கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளார். புதுமாத்தளன் பகுதியில் கடமையாற்றும் இருபதாவது காலாட்படையின் ஏ பிரிவுக்கு கட்டளைத் தளபதியாகச் செயற்பட்ட கப்டன் தம்மிக்க சேனாரத்ன, இராணுவ சிப்பாயான திலும் சஞ்ஜீவ ஆகியோரே இதே அணியில் சேவையாற்றிய சமன் குமார என்ற இராணுவ சிப்பாயை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திச் சுட்டுக் கொலை செய்துள்ளதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதுடன், இவர்கள் இருவரும் தற்போது விளக்கமறியலிலும் வைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை 28 ஆம் திகதி அனுராதபுரம் நீதிமன்றில் நடைபெற்றபோதே நீதிபதி மேற்படி உத்தரவை விடுத்துள்ளார். இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வரும் இரகசியப் பொலிஸார் குறித்த சந்தேக நபர்கள் இருவரையும் பிரத்தியேகமான சிறையில் வைக்கப்படாமையை சுட்டிக்காட்டியதுடன் இச்சம்பவத்தின் சாட்சிகளை தொலைபேசி மூலம் மிரட்டியும் வருகின்றனர். இத்தொலைபேசித் தொடர்புகளுக்கு அனுராதபுரம் சிறைச்சாலை காவலர்களில் ஒருவரான அசங்க பிரியதர்ஷன என்பவர் உதவியுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. இதேபோல் சந்தேக நபரான சிப்பாய் திலும் சஞ்ஜீவ முன்னர் நீதிமன்றத்தில் இச்சம்பவம் தொடர்பான விபரங்களைக் கூற விருப்பம் தெரிவித்த போதிலும் தற்போது அவர் இதற்கு மறுப்புத் தெரிவித்து வருகின்றார். விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கப்டன் தம்மிக்க சேனாரத்ன இவரை அச்சுறுத்தயதனாலேயே குறித்த சிப்பாய் உண்மைச் சம்பவம் பற்றிக் கூற மறுப்புத் தெரிவிக்கின்றார் என இரகசியப் பொலிஸார் தெரிவித்துள்ளனா. இதனையடுத்தே சிறைச்சாலை அத்தியட்சகரை தனிப்பட்ட வகையில் நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளதுடன் தொலைபேசித் தொடர்புகளை மேற்கொள்ள சந்தேக நபர்களுக்கு உதவிய குறித்த சிறைச்சாலை காவலரையும் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு நீதிபதியினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பரீட்சைக் கடமையில் ஈடுபட்டிருந்த மேற்பார்வையாளர் நெஞ்சுவலியால் மரணம்..
Next post அவ்வப்போது கிளாமர் படங்கள்..