விடுதலைப் புலிகளுக்கு உணவு மற்றும் நிவாரணப்பொருட்களை வழங்கிவந்த முஸ்லிம் நபர் ஒருவர் கைது

Read Time:2 Minute, 36 Second

மன்னார் மற்றும் வில்பத்து பிரதேசங்களில் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களுக்கான உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை விநியோகித்து வந்த முஸ்லிம் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிமல் மெதிவக தெரிவித்தார் வவுனியா தற்காலிக நலன்புரி முகாமில் தங்கியிருந்த நிலையில் தப்பிவந்து வண்ணாத்திவில்லு சேரன்குழி பிரதேசத்தில் இவர் மறைந்திருந்தபோது பொலிஸாருக்கு கிடைத்த தகவலொன்றின் அடிப்படையில் மேற்படி சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டார் என்றும் அவர் கூறினார் அவர் இதுதொடர்பில் மேலும் தெரிவிக்கையில் கடந்த 2002ம் ஆண்டு விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசம் ஒன்றுக்கு வேட்டைக்கு சென்றபோது மேற்படி நபர் விடுதலைப்புலிகளினால் கைதுசெய்யப்பட்டதாக அவரிடம் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது. அவ்வாறு அவர் கைதுசெய்யப்பட்ட பின்னர் தெரிவிக்கையில் மன்னார் மற்றும் வில்பத்து பிரதேசங்களில் இயங்கிவந்த புலி உறுப்பினர்களுக்கு உணவு மற்றும் பொருட்கள் விநியோகத்திலும் இவர் ஈடுபட்டுள்ளார் என தெரியவந்துள்ளது இந்நிலையில் வன்னியில் போர் உக்கிரமடைந்தபோது வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதியில் பொதுமக்களுடன் இணைந்து இராணுவக்கட்டுப்பாட்டுக்கு வந்து பின்னர் மெனிக்பாம் முகாமில் தங்கியிருந்து அங்கிருந்து தப்பித்து வண்ணாத்திவில்லு பிரதேசத்திற்கு வந்து மறைந்திருந்த வேளையிலேயே பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் அவரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிங்கள ஊடகவியலாளர் ஒருவர் இனந்தெரியாதோரால் கடத்தல்
Next post தமிழ்ப்பெண் ஒருவர் விசாஇல்லாமல் பிரிட்டனுக்குச் செல்வதற்கு பிரிட்டிஷ் தூதரகம் உதவி