நிவாரணக்கிராமங்களுக்கு மீளவும் திரும்பிய அருட்சகோதரிகள்

Read Time:1 Minute, 47 Second

வவுனியா நிவாரணக் கிராமங்களிலிருந்து கடந்த வாரம் தமது சொந்த வதிவிடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்ட இரு அருட்சகோதரிகள் நிவாரணக்கிராமங்களுக்கே மீளத்திரும்பிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. வவுனியா நிவாரண கிராமங்களில்; தங்கியிருந்த 107 இந்து மதக் குருமார்களின் குடும்பங்களைச் சேர்ந்த 431 பேர் மற்றும் ஒருதொகுதி கிறிஸ்தவ மதகுருமார் மற்றும் கன்னியாஸ்திரிகள் தமது வதிவிடங்களுக்கு மீள்குடியேற்றத்திற்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர். இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்ட கன்னியாஸ்திரிகளான அருட்சகோதரிகள் இருவர் மீளவும் நிவாரணக்கிராமத்திற்கே திரும்பியுள்ளனர். நடந்து முடிந்த கோர யுத்தத்தில் தமது தாய்தந்தையரை இழந்து மனநலம் பாதிப்படைந்த சிறுவர் சிறுமியர் மற்றும் ஆதரவற்ற முதியவர்களை இவ்வளவு நாளும் பராமரித்து வந்த தாம் தொடர்ந்தும் அப்பணியிலேயே ஈடுபடுவதற்காகவே மீளத்திரும்பியுள்ளதாக அருட்சகோதரிகள் இருவரும் கூறியுள்ளனர். அருட்சகோதரிகள் இருவரின் மீள்வருகையானது நிவாரணக்கிராம மக்கள் அனைவரையும் நெகிழ்ச்சியுறச் செய்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தமிழ் மக்களின் அபிலாஷைகள் நிறைவேற்றப்பட்டு அவர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டுமென்பதில் பிரித்தானிய அரசு மிகுந்த அக்கறை!
Next post பார்முலா ஒன் வரலாற்றில் முத்திரை பதித்தது இந்தியா