கொழும்பில் மீட்கப்பட்ட மலையக சிறுமிகளின் சடலங்கள் தொடர்பில் மர்மங்கள்

Read Time:1 Minute, 58 Second

கொழும்பு பௌத்தலோகா மாவத்தையில் சடலமாக மீட்கப்பட்ட பதுளை முள்ளுக்காமம் பகுதியைச் சேர்ந்த யுவதிகளின் பிரேத பரிசோதனை அறிக்கைகள் எதிர்வரும் 11ம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்த பிரேதபரிசோதனைகள் கண்டி வைத்தியசாலையில் கடந்த 28ம் திகதி இடம்பெற்றுள்ளன. மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகமிருப்பதாக தெரிவிக்கப்பட்டு சடலங்கள் மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டன. கொழும்பு சட்டவைத்திய நிபுணர்கள் மேற்கொண்ட பரிசோதனையின்படி யுவதிகளின் உடலில் எவ்வித காயங்களும் காணப்படவில்லையென்றும், நீரில் மூழ்கியதால் மரணம் சம்பவித்துள்ளதென்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும் பெற்றோரின் தகவலையடுத்து உடல்களில் காயங்கள் இருப்பது தொடர்பில் கண்டியில் இடம்பெற்ற பிரேத பரிசோதனை அறிக்கையின்படி உடல்களில் காயங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. அத்துடன் இறந்த சிறுமிகளான சுமதி, ஜீவராணி ஆகியோரில் சுமதியால் எழுதப்பட்ட கடிதத்தில் எமது மரணத்திற்கு தாம் வேலை செய்து வந்த வீட்டார் காரணமில்லையென்று குறிப்பிடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும் அது சுமதியினுடைய கையெழுத்தில்லையென்பதை பெற்றோர் ஆதாரத்துடன் சட்டத்தரணி ஊடாக நீதிமன்றில் நிரூபித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post (புலிகளின் தலைவர் பிரபாகரன் சரணடைந்து மரணமான) மே 17 முதல் அரசியல் இயக்கமாக மாறுவோம் -சீமான்
Next post புலிகளின் செயற்பாட்டாளர் ஒருவர் வண்ணாத்திவில்லுப் பகுதியில் வைத்து கைது