சட்டவிரோத குடியேற்றக் காரர்கள் அதிகரிப்பால் இலங்கையர்களுக்கு விசா வழங்க உலக நாடுகள் தயக்கம் -வெளிவிவகார அமைச்சர்!

Read Time:1 Minute, 43 Second

சட்டவிரோத குடியேற்றக் காரர்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ள காரணத்தினாலேயே இலங்கையர்களுக்கு விசா வழங்க உலக நாடுகள் தயக்கம் காட்டி வருகின்றன என வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார். சட்டவிரோதமான முறையில் குறித்த நாடுகளுக்குச் செல்ல முற்படுவதால் கிரமமாக வெளிநாடு செல்ல முயற்சிப்போருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதென்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆயிரக் கணக்கானோர் அவுஸ்திரேலியாவிற்கு கடல்வழியாக பிரவேசிக்க முயற்சித்து வருகின்றனர். படகுகள் மூலமாக இத்தாலிக்குச் செல்ல சட்டவிரோத குடியேற்றர்காரர்கள் முயற்சி மேற்கொள்கின்றனர். சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் பிரவேசிப்போரை தடுத்து நிறுத்த முடியாத அரசுகள் சட்ட ரீதியாக விசா விண்ணப்பம் கோருவோருக்கு அனுமதி வழங்குவதில்லை. ஒன் எரைவல் முறையில் இலங்கை 91 நாட்டுப் பிரஜைகளுக்கு விசா வழங்குகிற போதிலும் என் எரைவல் முறையில் இலங்கைக்கு விசா வழங்கும் நாடுகளின் எண்ணிக்கை மிகவும் சொற்பமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எந்தச் சூழ்நிலையிலும் ஒருபோதும் அரசியலில் ஈடுபடப் போவதில்லை -முன்னாள் இராணுவத் தளபதி!
Next post இலங்கையர்களுக்கு விஸா வழங்கப்படும்போது யுத்த குற்றச்செயல்கள் தொடர்பில் பிரித்தானியா கவனம் செலுத்தும்..