கே.பி.யை விசாரிப்பதற்கும் தம்மிடம் ஒப்படைக்குமாறும் கோரி இந்திய மத்திய புலனாய்வுத்துறை அடுத்தமாதம் கொழும்புக்கு வரும்..!

Read Time:2 Minute, 8 Second

இந்த மாத ஆரம்பத்தில் கைது செய்யப்பட்ட விடுதலைப்புலிகளின் புதிய தலைவரென அறிவிக்கப்பட்ட கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனை தங்களிடம் ஒப்படைக்குமாறு இலங்கை அரசை கோரும் நாடுகடத்தல் கோரிக்கை ஒன்றை விடுவிப்பதென இந்தியா தீர்மானித்துள்ளது 1991ம் ஆண்டு வருட ராஜீவ் காந்தியின் படுகொலையின் பின்னணியில் உள்ள பாரிய சதித்திட்டம் குறித்து அவரை விசாரிப்பதற்காக இந்திய புலனாய்வுக் குழு அடுத்த மாதமளவில் கொழும்புக்கு விஜயம் செய்ய இருக்கிறது. மத்திய புலனாய்வு விசாரணை பணியகத்தின் கீழ் இயங்கும் பல்ஒழுக்காற்று கண்காணிப்பு பிரிவு கே.பியின் விசாரணை குறித்து கவனம் செலுத்தி அவர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதை உறுதிப் படுத்துவதற்காக ராஜீவ் கொலை தொடர்பான விசாரணைகளுக்கு மேலும் ஒருவருடகாலம் நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது. ராஜீவ் கொலை விசாரணை காலம் கடந்த மேமாதம் 31ம் திகதியுடன் முடிவடைந்தது அடுத்து விசாரணை நீடிப்புக்கான கோரிக்கை இதுவரை பரிசீலனையில் இருந்துள்ளது எனினும் ஆகஸ்ட் மாதம் 7ம் திகதி கே.பியை கைது செய்யப்பட்ட பின்னர் மேற்படி விசாரணைக் காலத்திற்கு நீடிப்பு வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்தியப் புலனாய்வு அதிகாரிகள் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் கேபியை இலங்கை அதிகாரிகள் விசாரணை செய்து வருவதாகவும் தெரிய வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நெதர்லாந்து நாட்டை சேர்ந்த சிறுமி தன்னந்தனியாக உலகை சுற்றிவர திட்டம்..!
Next post எந்தச் சூழ்நிலையிலும் ஒருபோதும் அரசியலில் ஈடுபடப் போவதில்லை -முன்னாள் இராணுவத் தளபதி!