பிரபாகரன் உயிருடன் தான் உள்ளார்! – TNA (TELO)சிவாஜிலிங்கம் எம்பி

Read Time:2 Minute, 37 Second

tnasivajilingam200anifoxbad_wolfதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன்தான் உள்ளார். இதுபற்றிய நம்பகமான தகவல்கள் எனக்குக் கிடைத்துள்ளன, என்ற இலங்கை எம்பி சிவாஜிலிங்கம் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். 3 மாதங்களுக்கு முன், புலிகள் முற்றிலுமாக தோற்கடிக்கப்பட்ட தகவல் வெளியானபோது, ‘இன்னும் சில நாட்களில் பிரபாகரன் இறந்துவிட்டார் என்று புலிகளே அறிவிப்பார்கள்… சூழ்நிலை கருதி அப்படியொரு அறிக்கை வெளியாகும்!” என்று மதுரையில் இவர்தான் பேட்டி கொடுத்தார். அடுத்த சில தினங்களிலேயே அப்படியொரு அறிக்கையை செல்வராசா பத்மநாதன் வெளியிட்டார். இந் நிலையில் கோவையில் நிருபர்களிடம் பேசிய சிவாஜிலிங்கம், எங்களுக்குக் கிடைத்த தகவல்களின்படி தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் பிரபாகரன் உயிருடன்தான் உள்ளார். அவர் இறந்து விட்டதாக செல்வராஜா பத்மநாதன் கூறியிருப்பதில் ஏதேனும் அரசியல் சூசகம் அடங்கியிருக்கலாம். பத்மநாபன் கைது முதற்கொண்டு பல விஷயங்களை நாங்கள் அப்படித்தான் கருதுகிறோம். தேசிய தலைவர் இறந்து விட்டதாக எந்த தகவலும் எங்களுக்கு உறுதியாக, ஆதாரங்களுடன் கிடைக்கவில்லை. இலங்கை அரசு அதற்கான ஆதாரங்கள் எதையும் தரவுமில்லை. நான் தமிழ்மக்களுக்கு சொல்லிக் கொள்ள விரும்புவது இதுதான். தேசிய தலைவர் உயிருடன் உள்ளாரா என்பதற்கு காலம் பதில் சொல்லும். தற்போதைய உடனடி தேவை அகதிகளாக உள்ள 3 லட்சம் மக்களை அங்கிருந்து காப்பாற்றி, அவர்களின் இடங்களில் குடியமர்த்துவதுதான். மற்றபடி தமிழர்களுக்கு நிரந்தரத் தீர்வு என்பது சுய அரசியல் நிர்ணய சபையுடன் கூடிய தமிழீழமே. ஆயுதப் போராட்டத்தைத் தொடர்வதா இல்லையா என்பது விடுதலைப் புலிகளின் கையில்தான் உள்ளது என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

2 thoughts on “பிரபாகரன் உயிருடன் தான் உள்ளார்! – TNA (TELO)சிவாஜிலிங்கம் எம்பி

  1. சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தானாம் ஆண்டி எண்டது உமக்கு தெரியாததா? உங்களை போல ஆட்கள் பாதுகாப்பான இடங்களில இருந்துகொண்டு கொக்கரிச்சு போட்டு கிடந்திடுவியல் பாரும்! அங்க பாதுகாப்பு வலயத்திற்குள் ஆப்பிட்டு இருக்கிற ஆட்களை ஒவ்வொருநாளும் செய்கின்ற கொடுமைகள் காணாதெண்டு உங்கடை கதைகளை கேட்டு அவங்கள் இன்னம் ஆக்ரோசமாக செய்வாங்கள் எண்டு உமது மரமண்டைக்கு தெரியாதா? போயா போயி உன்டை சொந்த சோலியை பார்!!!

  2. எம் தலைவர் சாகவில்லை என்றும் புலி ஓயவில்லை

Leave a Reply

Previous post வெளிநாடுகளில் உள்ள புலிகளின் சொத்துக்களை முடக்கி அவற்றின் உரிமைகளை இலங்கை அரசாங்கம் பெற்றுக் கொள்வது குறித்து சர்வதேச மட்டத்தில் பேச்சுவார்த்தை!
Next post நடிகர் விஜய் காங்.கில் சேர்ந்தால்.. படங்களைப் புறக்கணிப்போம்: “கனடா புலிகளின்” தமிழ் படைப்பாளிகள் கழகம்