யாழ்ப்பாணத்தில் பிரித்தானியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லியாம் பொக்ஸ்!

Read Time:2 Minute, 22 Second

இலங்கை வந்துள்ள கன்சர்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரித்தானியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சருமான லியாம் பொக்ஸ் யாழ்ப்பாணத்தை சென்றடைந்துள்ளார். அங்கு அவர் யாழ் ஆயர் இல்லத்தில் யாழ்மாவட்ட சமாதானத்திற்கும் நல்லெண்ணத்துக்குமான மக்கள் குழுவினரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார் இந்த சந்திப்பின் போது இலங்கையில் இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வை காணாமல் போர் இடம்பெற்ற பிரதேசங்களின் அபிவிருத்தி செயற்பாடுகள் சாத்தியமாகாது என சமாதானத்திற்கும் நல்லெண்ணத்திற்குமான குழுவினர் லியாம் பொக்ஸி;டம் தெரிவித்துள்ளனர். அத்துடன் வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை பருவமழை ஆரம்பமாவதற்கு முன்னர் அவர்களுடைய சொந்த இடங்களில் மீள்குடியமர்வதற்கு பிரித்தானியா இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் யாழ் மாவட்டத்து மக்கள் வெளி மாவட்டங்களுக்குச் செல்வதினால் இராணுவத்தின் அனுமதி பெற்றே செல்ல வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மாற்றம் கொண்டு வரப்பட்டு அவர்கள் சுதந்திரமாக பிரயாணம் செய்வதற்கு உதவ வேண்டும் என்றும் யாழ் மாவட்ட சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான குழுவினர் லியாம் பொக்ஸிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதன் பின்னர் யாழ்மாவட்ட அரசாங்க அதிபரையும் சந்தித்து யாழ் மாவட்டத்தின் நிலைமைகள் தொடர்பாக கேட்டறிந்து விட்டு கொழும்பு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தென் மாகாணசபைத் தேர்தல் எதிர்வரும் அக்டோபர் மாதம் 10ம் திகதி
Next post களுவான்கேணியில் சுடப்பட்டவர் மீள்குடியேற்றவாசி எனத் தகவல்..!