ஊவா மாகாண முதலமைச்சர் சசீந்திரகுமார ராஜபக்ஷ நேற்று கடமைகள் பொறுப்பேற்பு

Read Time:2 Minute, 26 Second

ஊவா மாகாண முதலமைச்சர் சசீந்திரகுமார ராஜபக்ஷ நேற்றுக்காலை தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமானும் நேற்று தனது கடமைகளை ஏற்றுக் கொண்டார். இந்நிகழ்வில், முதலமைச்சரின் தந்தையாரான அமைச்சர் சமல் ராஜபக்ஷ, மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமானின் மாமனாரான அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், அமைச்சர்களான நிமால் சிரிபால டிசில்வா, டிலான் பெரேரா, பிரதி அமைச்சர்களான முத்து சிவலிங்கம், எம். ஜெகதீஸ்வரன், முன்னாள் ஊவா மாகாண முதலமைச்சர் காமினி விஜித் விஜய முனி சொய்சா, ஊவா மாகாண ஆளுநர் சி.நந்தமெத்தியூ ஆகியோர் பிரதம மற்றும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டிருந்தனர். இந்நிகழ்வில், இந்து, பௌத்த, கிறிஸ்தவ, இஸ்லாம் மதகுருமார்கள் தத்தமது சமயங் களின் அடிப்படையில் சமய அனுஷ்டானங்களுடன் மேற்கொள்ளப்பட்டன. ஊவா மாகாண சபைக்கு தெரிவான ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர்கள், ஆளும்கட்சி உறுப்பினர்களுடன் கட்சிப் பேதங்களை மறந்து கைலாகு கொடுத்து சிநேகபூர்வமாக உரையாடிக் கொண்டிருந்தனர். அமைச்சர் செந்தில் தொண்டமான் அமைச்சுப் பொறுப்பேற்கும் நிகழ்வில், அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மற்றும் பிரதி அமைச்சர்களான முத்துசிவலிங்கம், எம். ஜெகதீஸ்வரன் ஆகியோருடன் சபைக்கு ஐ.தே.கட்சி சார்பாக தெரிவான கே.வேலாயுதம், சபைக்கு மலையக மக்கள் முன்னணி சார்பாக தெரிவான அ.அரவிந்குமார், ஐ.தே.க.சார்பாக போட்டியிட்டு தோல்வியுற்ற வே.குமரகுருபரன் ஆகியோர் கலந்துகொண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வவுனியா அரச அதிகாரிகள் விடுதிகள் மீது இனந்தெரியாதவர்கள் கல்வீச்சு
Next post நிர்வாணமாக வேலை செய்யும் அலிசியா!