வவுனியா அரச அதிகாரிகள் விடுதிகள் மீது இனந்தெரியாதவர்கள் கல்வீச்சு

Read Time:1 Minute, 40 Second

வவுனியா உள்சுற்று வீதியில் அமைந்துள்ள அரச திணைக்கள அதிகாரிகளின் விடுதிகள் மீது இரவு நேரத்தில் கல்வீச்சு நடத்தியவர்களை கைதுசெய்வதற்கு பொலிஸார் வலைவிரித்துள்ளனர். நேற்று இரவு 11.15மணியளவில் இந்த கல்வீச்சு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வவுனியா பொலிஸாரிடம் முறையிடப்பட்டிருக்கின்றது வவுனியா மாவட்டத்தின் அரச உத்தியோகத்தர்கள் தங்குவதற்கான அரச விடுதிகள் அமைந்துள்ள உள்சுற்று வீதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.  சர்வதேச தொண்டு நிறுவனத்தின் பெயர்ப்பலகை, கச்சேரி நீதிமன்றம் உட்பட அரச திணைக்கள அதிகாரிகள் வசிக்கும் வீடுகளை இலக்குவைத்தே இந்த கல்வீச்சுத்தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக வவுனியா பொலிஸாரிடம் முறையிடப்பட்டுள்ளது சம்பவம் பற்றி கேள்விபட்டதும் அப்பகுதிக்கு விரைந்த பொலிஸார் தேடுதல் நடத்தினர் என்றும் இருப்பினும் தாக்குதல் நடத்தியவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டதாக தெரிவிக்கப்படுகிறது இதுகுறித்து மேலிட உத்தரவுக்கமைய வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மீள் பிரேத பரிசோதனையில் மஸ்கெலிய சிறுமிகளின் சடலங்கள்..
Next post ஊவா மாகாண முதலமைச்சர் சசீந்திரகுமார ராஜபக்ஷ நேற்று கடமைகள் பொறுப்பேற்பு