‘தம்’ அடிப்பதில் இந்திய பெண்களுக்கு 3 வது இடம்!!
உலக அளவில் அதிகம் தம் அடிக்கும் பெண்கள் வரிசையில் இந்தியப் பெண்களுக்கு மூன்றாவது இடம் கிடைத்துள்ளது. முதலிடத்தை அமெரிக்காவும், இரண்டாவது இடத்தை சீனாவும் பிடித்துள்ளன. அமெரிக்க புற்றுநோய் அமைப்பு மற்றும் உலக நுரையீரல் பவுண்டேஷன் ஆகிய அமைப்புகள் சேர்ந்து புகைபிடிக்கும் பெண்கள் குறித்து புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, உலகம் முழுவதும் சுமார் 25 கோடி பெண்கள் புகை பழக்கத்துக்கு அடிமையாகி உள்ளனர். அவர்களில் 22 சதவீதம் பேர் மட்டுமே வளர்ந்த நாடுகளை சேர்ந்தவர்கள். இந்த பழக்கம் உள்ளவர்கள் வரிசையில் இந்தியப் பெண்கள் மூன்றாவது இடத்தில் இருக்கின்றனர். இதனால் அவர்கள் அவர்கள் சுமார் 8 ஆண்டுகள் முன்னதாகவே இறந்து விடுகின்றனர். முதலிரண்டு இடங்களை அமெரிக்காவும், சீனாவும் பிடித்துள்ளன. அமெரிக்காவில் 2.3 கோடி பெண்களும், சீனாவில் 1.3 கோடி பெண்களும் புகை பிடிக்கின்றனர். இந்தியாவில் புகை பிடிக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், மொத்த பெண்கள் தொகையில் இது 20 சதவீதத்துக்கும் குறைவு. பாகிஸ்தானில் 30 லட்சம்… இந்தியாவை தவிர்த்து மற்ற தெற்காசிய நாடுகளில் இது மகிவும் குறைவு தான். பாகிஸ்தான் பெண்கள் இந்த பட்டியலில் 20வது இடத்தில் இருக்கின்றனர். சுமார் 30 லட்சம் பாகிஸ்தானிய பெண்கள் புகைபிடிக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் இந்த பழக்கத்துக்கு சுமார் 60 லட்சம் மக்கள் பலியாகி வருகின்றனர். அவர்களில் 20 லட்சம் பேர் புற்றுநோய்க்கு இறையாகி வருகின்றனர். இதனால் உலக பொருளாதாரம் ஆண்டுக்கு ரூ. 50 ஆயிரம் கோடி டாலர் இழப்பை சந்திக்கிறது. 2015 முதல் ஒவ்வொரு ஆண்டும் 21 லட்சம் பேர் புகையிலை பாதிப்பினால் உண்டாக்கும் புற்றுநோயால் மரணமடைவார்கள் என்கிறது அந்த தகவல்.
குழந்தைகளுக்கு பாதிப்பு உண்டாகும்…
இது குறித்து ஹீலிஸ் சேக்ஷாரிய பொது சுகாதார நிறுவனத்தின் டாக்டர் பிசி குப்தா கூறுகையி்ல்,
இந்தியாவில் புகை பிடிக்கும் பெண்களின் சதவீதம் குறைவாக தான் இருக்கிறது. ஆனால், இந்தப் பழக்கத்தால் ஆண்களை விட பெண்களுக்கு தான் பாதிப்பு அதிகம் ஏற்படுகிறது. பெண்களுக்கு குறைபிரசவம், எடை குறைந்த குழந்தை, ரத்த சோகை போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
புகையிலை நிறுவனங்கள் கட்டுடல் ரகசியம், வலிமை கூடும், இல்லற வாழ்க்கை நன்றாக இருக்கும் என இந்த பெண்களை ஏமாற்றி விற்பனையை கூட்டி வருகின்றன. கல்லூரி மாணவிகள் மத்தியில் புகைபிடிக்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்றார்.
One thought on “‘தம்’ அடிப்பதில் இந்திய பெண்களுக்கு 3 வது இடம்!!”
Leave a Reply
You must be logged in to post a comment.
தம் அடிபதில மட்டுமா மூன்றாம் இடம்? புருசன்மார் குத்துகல்லாட்டம் இருக்கேக்கையே அடுத்தவனோடையை பிடிப்பதிலும் இந்தியன் தான் உலகிலேயே முதலிடமாம் பாருங்கோ!