பருவமழைக்கு முன் மன்னாரில் வயல்களில் உள்ள கண்ணிவெடிகள் அகற்றப்படும் -இந்திய கண்ணிவெடி அகற்றும் குழு!

Read Time:1 Minute, 55 Second

முன்னாரில் விளைநிலப் பகுதிகளின் நிலக்கண்ணிவெடி அகற்றும் பணிகளை எதிர்வரும் பருவப்பெயர்ச்சி மழைக்கு முன்னர் நிறைவு செய்து விவசாயிகளுக்கு கையளிக்க திட்டமிட்டுள்ளதாக இந்திய கண்ணிவெடி அகற்றும் குழு தெரிவித்துள்ளது இந்த கண்ணிவெடிகளை ஜப்பான் அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் செயலிழக்கச் செய்யம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. மன்னார் பிரதேசத்தில் ஒருகிலோமீற்றர் பகுதியினுள் யுத்த தாங்கிகளை தகர்க்கும் 14 நிலக்கண்ணிவெடிகளை மீட்டுள்ளதாக அந்த குழுவின் முகாமையாளர் மந்திர் சிங் தெரிவித்துள்ளார் நிலக்கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு விவசாயிகளிடம் கையளித்த பின்னர் அவர்கள் தமது விவசாய நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார். தற்போது மன்னாரில் கண்ணிவெடி அகற்றல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் பகுதி மிகவும் அதிக அளவில் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்ட பிரதேசமாக காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.  சாதாரண நாட்களில் 10தொடக்கம் 20வெடிகளே மீட்கப்பட்டு வந்தாலும் இந்த பிரதேசத்தில் கடந்த 3நாட்களில் மாத்திரம் 200தொடக்கம் 300வரையான கண்ணிவெடிகளை மீட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வவுனியா நலன்புரி நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மதகுமார் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைப்பு
Next post இலங்கை இராணுவத்தினர் தமிழ் இளைஞர்களைச் சித்திரவதை செய்யும் காட்சிகள் வெளியீடு!