2008 வருடாந்த அறிக்கையின்படி பொலிஸாருக்கு எதிராக 1380 முறைப்பாடுகள் -பொலிஸ் ஆணைக்குழு தெரிவிப்பு

Read Time:1 Minute, 39 Second

பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக 1380 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது 2008ம் ஆண்டு தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கையின் மூலம் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த போது 6பேர் உயிரிழந்ததாகவும் 92தாக்குதல் சம்பவங்களும் 35சித்திரவதை சம்பவங்களும் 84சட்டவிரோத கைது சம்பவங்கள் மற்றும் 49போலிக் குற்றச்சாட்டுகள் என இந்த முறைப்பாட்டு பட்டியல் நீண்டுக்கொண்டு செல்வதாக தெரிவிக்கப்படுகிறது. அதிகார துஷ்பிரயோகம், பொலிஸாருக்கு எதிரான முறைப்பாடுகள், விசாரணைகள் விசாரிக்கப்படாமை போன்ற சம்பவங்கள் தொடர்பிலும் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன 17வது திருத்தச்சட்டமூலம் அமுல்படுத்தப்படும் வரையில் சுயாதீன ஆணைக்குழுக்களை நிறுவமுடியாது எனவும் இதனால் பொலிஸாருக்கு எதிராக முறையான ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுக்க முடியாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மட்டக்களப்பில் யானை மிதித்து ஒருவர் பலி
Next post கொழும்பில் மூவர் கடனட்டை மோசடி தொடர்பில் கைது