அமெரிக்காவின் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலங்கை கடும் அதிருப்தி

Read Time:3 Minute, 1 Second

அமெரிக்காவின் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலங்கை கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது இடைத்தங்கல் முகாம் நிலைவரங்கள் தொடர்பில் உண்மையை அறிந்து கொள்ளாது அமெரிக்கா கருத்து வெளியிட்டு வருவதாக பாதுகாப்பு பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார் தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்தியத்திற்கான பிரதி இராஜங்கச் செயலாளர் பதவியை பொறுப்பேற்றுக் கொள்வதற்கு முன்னர் ரொபர்ட் ஓ பிளேக் முகாம்களுக்கு விஜயம் செய்திருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார் அகதி முகாம் நிலவரங்களை நேரில் பார்வையிட்டவர் என்ற வகையில் இலங்கை மீது சுமத்தும் குற்றச்சாட்டுக்கள் ஏற்புடையதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட ஏனைய உயர் இராஜதந்திரிகள் அகதி முகாம் நிலவரங்கள் குறித்து திருப்தியடைந்துள்ள நிலையில் அமெரிக்கா தொடர்சியாக விமர்சனங்களை வெளியிட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார் ஐக்கிய நாடுகளின் பொதுச் சேயலாளர் பான் கீ மூன் அண்மையில் முகாம்களுக்கு விஜயம் மேற்கொண்டிருந்ததாகவும் முகாம் சூழ்நிலை தொடர்பில் அவர் மகிழ்ச்சி வெளியிட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் குறிப்பிட்ட சில நாடுகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இலங்கையின் மீது தேவையற்ற வகையில் கட்டுப்பாடுகளை விதிக்க முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் இந்த நிலைமைகள் குறித்து இலங்கை அரசாங்கம் விழிப்புடன் செயற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். வடக்கு அபிவிருத்தி மற்றும் உதவி வழங்கும் போர்வையில் இலங்கை விவகாரங்களில் மூக்கை நுழைக்க சில வெளிநாட்டு சக்திகள் முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். மேலும் நிலக்கண்ணிவெடிகளை அகற்றித் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தும் வரையில் அகதி முகாம் மக்களை மீளக்குடியமர்த்த முடியாது எனவும் அவர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாதுகாப்புச் செயலாளரை இலக்குவைத்து கொழும்பில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் மீட்பு
Next post முக்கியமான தருணங்களில் இலங்கைக்கு சீனா ஆதரவாக இருந்துள்ளது -அரசாங்கம்