அகதி முகாம் ஊழல் மோசடியில் அமைச்சர் உறவினர்களுக்கு தொடர்பு சபையில் ஹக்கீம் குற்றச்சாட்டு

Read Time:2 Minute, 52 Second

வவுனியா அகதி முகாம்களில் இடம்பெறும் நிர்மாணப் பணிகள்  மற்றும் திட்டங்களில் அமைச்சரும் அவரது சகோதரர் மற்றும் உறவினர்களும் ஊழல் மோசடிகளில் ஈடுபடுவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் எம்பியுமான ரவுப் ஹக்கீம் குற்றம் சாட்டினார் பாராளுமன்றில் நேற்றுமுன்தினத் இடம்பெற்ற வவுனியா அகதிமுகாம் மக்களின் அவல நிலை தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு ஹக்கீம் குற்றம் சாட்டியுள்ளார் அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் வவுனியவில் அகதி முகனாம்களில் இடம்பெறும் பணிகளில் ஊழல் மோசடிகள்  நடக்கின்றன நிர்மாணப்பணிகளுக்கு பொருட்களை அனுப்பும் நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட அமைச்சரின் உறவினர்களுடையதாகவுள்ளன அகதி முகாம்களில் இடம்பெறும் பணிகளுக்கு பொறுப்பாக இருப்பவர் அமைச்சரின் சகோதரர் ஆவார் எனவே அகதிமுகாம் பணிகளில் அமைச்சரும் அவரது சகோதரரும் உறவினர்களும் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றனர் இப்பணிகளில் இவர்கள் ஈடுபடும்போது எப்படி ஊழல் மோசடிகள்  இடம்பெறவில்லையென கூறமுடியும் எனவே இதுதொடர்பில் விசாரணைகள் நடத்தப்படவேண்டும் அகதிகள் மீள்குடியேற்றம் என்பது 180 நாட்களுக்குள் இடம்பெறாது என்றே தெரிகிறது வன்னி முழுவதும் கண்ணிவெடி மிதிவெடிகள் புதைக்கப்பட்டிருப்பதாக கூறியது மிகைப்படுத்தப்பட்டதொன்றாகவே காணப்படுகிறது முசலி பிரதேசம் மீட்கப்பட்டு 2வருடங்கள் கடந்துவிட்டபோதும் அங்கு இன்னும் மீள்குடியேற்றம் இடம்பெறவில்லை இங்கு மீள்குடியேற்றம் செய்ய ஏன் காலதாமதமாகின்றதென்பது புரியாத புதிராகவேயுள்ளது. இதேவேளை இலங்கைக்கான சர்வதேச நிதியுதவிகள் குறைவடைந்து வருகின்றது மீள்குடியேற்றத் தேவைகள் இருக்கும்போது சர்வதேசத்தின் நிதியுதவி குறைந்து வருவது ஏன் என்று புரியவில்லை மக்களை மீள்குடியேற்ற மிதிவெடியகற்றும் வரை காத்திருக்கத் தேவையில்லை எமக்குள் ஒரு கூட்டுறவு ஏற்படவேண்டும்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தழிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வாகனம் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது
Next post நவம்பர் 27ல் “பிரபாகரன்” திரைப்படம் துவக்கம்!