சசீந்திர ராஜபக்ஷ ஊவா முதல்வராக இன்று சத்தியப் பிரமாணம்

Read Time:2 Minute, 18 Second

ஊவா மாகாண சபையின் முதலமைச்சராக சசீந்திர ராஜபக்ஷ இன்று பதவியேற்றுள்ளார். இது தொடர்பாக அலரி மாளிகையில் இன்று நடைபெற்ற நிகழ்வில் ஜனாதிபதி முன்னிலையில் இவர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். நடந்து முடிந்த ஊவா மாகாண சபைத் தேர்தலில் 1இலட்சத்து 36ஆயிரத்து 697 வாக்குகளைப் பெற்று இவர் சாதனை படைத்திருந்தார். இலங்கை அரசியல் வரலாற்றில் மாகாண அரசியலில் ஆக குறைந்த வயதில் முதலமைச்சராகத் தெரிவு செய்யப்படுபவர் இவராவார். 1978 இல் ஜுன் மாதம் 28 ஆம் திகதி பிறந்த இவர் ஜனாதிபதியின் மூத்த சகோதரரும், துறைமுகங்கள், விமான சேவைகள், நெடுஞ்சாலை, நீர்ப்பாசன அமைச்சர் சமல் ராஜபக்ஷவின் மகனாவார். ஆரம்பக் கல்வியை கொழும்பு மாகாநாம கல்லூரியிலும், இடைநிலைக் கல்வியை கல்கிஸ்ஸ சென்தோமஸ் கல்லூரியிலும் தொடர்ந்த சசீந்திர உயர்தரக் கல்வியை புது டில்லியில் உள்ள பல்கலைக்கழகமொன்றில் மேற்கொண்டு அரசியல் விஞ்ஞானத்துறையில் கௌரவப்பட்டம் பெற்றுக்கொண்டார் என்றும் கூறப்படுகிறது. அத்தோடு கொழும்பு பல்கலைக்கழகத்தில் வர்த்தக முகாமைத்துவமும், பண்டாரநாயக்க சர்வதேச கல்வி நிலையத்தில் சர்வதேச தொடர்பாடல் டிப்ளோமாவையும் பெற்றுக் கொண்டுள்ளாராம். ஊவாவிற்கும், தென்மாகாணத்திற்கும் ஒர உறவுப் பாலமாக அமையப்போகும் புதிய முதலமைச்சர் சசீந்திர குமார ராஜபக்ஷவின் மேல் ஊவா மக்கள் அபார நம்பிக்கையை வைத்திருப்பதை ஊவா மாகாண சபைத் தேர்தல் வெளிக்காட்டியதாக கூறப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கண்ணிவெடி அகற்றும் பணிக்கு அமெரிக்கா மேலும் நிதியுதவி
Next post கற்பழிப்பு வழக்கில் சிக்கிய 9 வயது சிறுவன்..