தகவல் தொழில்நுட்ப மாணவர் மீதான தாக்குதல் பிரதான சந்தேக நபர் ரவிந்து வைத்தியசாலையில் அனுமதி

Read Time:2 Minute, 8 Second

மாணவர் ஒருவரை கடத்திச்சென்று தாக்கிய சம்பவத்தில் பிரதான சந்தேக நபரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வாஸ் குணவர்தனவின் மகனுமான ரவிந்துகளுபோவிலை வைத்தியசாலையில் அனுமதி;க்கப்பட்டுள்ளார்.  தான் சுகயீனமுற்று இருப்பதாக கூறியே வைத்தியசாலையில் சேர்ந்துள்ளார் இலங்கை தகவல் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் ஒன்றின் மாணவரான நிபுன் ராமநாயக்க என்பவரை கடத்தி;ச் சென்று தாக்கியவர்களில் இவர் பிரதான சந்தேக நபராக கருதப்படுகிறார் இதேவேளை கடுவெல நீதவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமாகிய மணிலால் பிரசன்ன இச்சம்பவத்தில் தொடர்புடைய பொலிஸ்காரர்கள் 11பேரையும் இம்மாதம் 31ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார் அத்துடன் வைத்தியசாலையில் தன்னை அனுமதித்துக் கொண்ட முதல் சந்தேகநபரான ரவிந்துவை சென்று பார்க்கும்படி நுகேகொடை நீதவானை அவர் கோரியுள்ளார். விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ள 11பொலிஸாரின் அடையாள அணிவகுப்பு இம்மாதம் 31ம் திகதி இடம்பெறவுள்ளது இந்த 11பேரில் இன்ஸ்பெக்டர் மூவரும் சார்ஜன்ட் ஒருவரும் கான்ஸ்டபிள்கள் 7பேரும் அடங்குவதாகவும் இந்த சம்பவத்தின் மீது சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வாஸ்குணவர்தன அவரது மனைவி இருவரும் சந்தேகநபர்களாக உள்ளார்களா? என்பதை விசாரணை செய்யமாறு கொழும்பு குற்றவியல் விசாரணை பிரிவுக்கு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தப்பிச் செல்வதற்காக வவுணதீவு வாவியில் குதித்த புலி உறுப்பினர் உயிரிழப்பு
Next post மூன்று நாட்கள் பெய்த கடும் மழையால் வவுனியாவில் சுமார் 2 ஆயிரம் தங்குமிடங்கள் சேதம்..