ஜப்பான்-தைவானில் இன்று பயங்கர நிலநடுக்கம்

Read Time:1 Minute, 42 Second

தைவான் நாட்டிலும் ஜப்பானிலும் இன்று (17) பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.ரிக்டர் அளவுகோளில் 6.8 புள்ளிகள் அளவுக்கு பதிவான இந்த நிலநடுக்கத்தால் சேதம் ஏதும் ஏற்படவி்ல்லை.ஜ்பானின் தென் பகுதியில் உள்ள இசிகாதி தீவு அருகிலும், தைவானின் கிழக்குக் கடற்கரை பகுதிகளிலும் இந்த நில நடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தில் மையத்திலிருந்து 200 கி.மீ. தொலைவில் உள்ள தைவான் தலைநகர் தைபேவிலும் இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின. ஜப்பான் நேரப்படி காலை 9.11 மணிக்கு பூமியின் 11 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
தைவானில் அடுத்தடுத்து இயற்கை சீற்றம்.. கடந்த 6ம் தேதி முதல் 9ம் தேதி வரை தைவானைத் தாக்கிய கடும் புயலால் அந்த நாட்டின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. இந்த கன மழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் 500க்கும் மேற்பட்டவர்கள் பலியாகிவிட்ட நிலையில் பூகம்பம் தாக்கியுள்ளது. நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில் பூகம்ப தாக்குலுக்கு அந் நாடு உள்ளாகியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெற்ற குழந்தைக்கு தாய்ப்பாலுடன் விஷம் கலந்து கொடுத்த பே(தா)ய்.. குழந்தைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை
Next post புதுக்குடியிருப்பு, சுகந்திபுரம், குப்பிலான்குளம்.. 12 படகு இயந்திரங்கள் மற்றும் பெருமளவு வெடிபொருளும் மீட்பு