விடுதலைப்புலிகள் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றியம் பகிரங்கமாக அறிவித்துள்ளது

Read Time:2 Minute, 1 Second

LTTE.band-Tiger+flag1.jpgவிடுதலைப்புலிகள் அமைப்பை 29.05.06 அன்று ஐரோப்பிய ய10னியன் பயங்கரவாத இயக்கமாக அறிவித்து தடைசெய்திருக்கிறது. 25நாடுகள் அங்கம் வகிக்கும் ஐரோப்பிய ய10னியனின் அமைச்சரவை நேற்று புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவித்திருப்பதை செய்திஸ்தாபனங்கள் அனைத்தும் இன்று உறுதி செய்தன. இதேசமயம் உலகின் முக்கிய நகரங்களில் புலிகள் இத்தடையை விதிப்பதற்கு எதிராக ஊர்வலம் செய்திருந்ததுடன் புலிகளை ஏகப்பிரதிநிதிகளாக அங்கீகரிக்குமாறு கோஷம் எழுப்பியிருந்தனர்.

தற்போது புலிகள் மீது கொண்டு வரப்பட்டுள்ள தடையானது புலிகளின் நிதிசேகரிப்பு மற்றும் பிரச்சார நடவடிக்கைகள் மத்தியில் பாரிய வீழ்ச்சியைக் கொண்டு வரும் என கருதப்படுகிறது. பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில் விடுதலைப்புலிகளை ஜரோப்பிய ய10னியனும் இணைத்துக் கொண்டுள்ளதும் கடந்த 18ம் திகதி இதற்கான முடிவு எடுக்கப்பட்டபோதும். அதன் உத்தியோகப10ர்வ அறிவிப்பு நேற்றையதினம் 29ம் திகதியே வெளியிடப்பட்டுள்ளதும்

ஜரோப்பிய ய10னியனில் 25 ஐரோப்பிய நாடுகள் அங்கம் வகிக்கின்றமையும் அதன் தலைமை பொறுப்பை ஒஸ்ரியா நாடு கொண்டுள்ளதும் மேற்படி ஐரோப்பிய ஒன்றியத்தில் நோர்வே சுவிஸ் ஆகிய இரண்டு ஐரோப்பிய நாடுகளும் உத்தியோகபூர்வமாக இணையவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கது. Thanks…WWW.ATHIRADY.COM

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கேள்விமேல் கேள்வி கேட்டு கருணாநிதியை திணறடித்தார் ஜெயலலிதா, ஜான்சி ராணியை போல் துணிச்சல் மிக்கவர் வைகோ பாராட்டு
Next post வேலியே பயிரைமேயும் சூட்சுமம் இதுதான்