புலிகளின் சர்வதேச இணைப்பாளரான கே.பி யின் உள்ளுர் ஏஜென்ட் இடைத்தங்கல் முகாமிலிருந்து கைது

Read Time:1 Minute, 41 Second

புலிகளின் சர்வதேச இணைப்பாளரான கே.பி எனப்படும் குமரன் பத்மநாதனின் உள்ளுர் ஏஜென்ட், இடைத்தங்கல் முகாம் ஒன்றில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இவர் தொடர்பாக அங்கிருந்த மக்கள், இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கொடுத்த பிரத்தியேக தகவல் ஒன்றின் அடிப்படையிலேயே இக்கைது இடம்பெற்றுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள இவர் உருமாறன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் புலிகளுக்கான ஆயுதக்கடத்தல் மன்னாக விளங்கிய கேபி யின் இலங்கைக்கான முன்னணி முகவராக செயற்பட்டு வந்ததாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட சகல இராணுவ உபகரணங்களுக்கும் கேபி யுடனான இரகசிய தொடர்பாளராக செயற்பட்டதாக இவர் தெரிவித்துள்ளார். ஆங்கிலம் மற்றும் ஐரோப்பிய மொழிகள் சிலவற்றையும் சரளமாக பேசக்கூடிய இவர் சிறந்த கல்விப்பின்புலத்தை கொண்டுள்ளார். அத்துடன் இவர் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக 19 தடவைகள் நாட்டை விட்டு வெளியே சென்றுள்ளதுடன் சில தடவைகளில் சட்டவிரோதமாக படகுகளிலும் நாட்டினுள் வந்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அவ்வப்போது கிளாமர் படங்கள்..
Next post அம்பாந்தோட்டையில் 304டெங்கு நோயாளர்கள்