கேபி என்ற பத்மநாதனுக்கு இன்டர்போல் வலை!

Read Time:1 Minute, 15 Second

கேபி என்று விடுதலைப் புலிகள் வட்டாரத்தில் அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் எனப்படும் செல்வராசா பத்மநாதனைக் கைது செய்ய இன்டர்போல் போலீஸார் தீவிரமாகியுள்ளனர். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சர்வதேச பிரிவின் தலைவராக விளங்கும் பத்மநாதன், புலிகள் இயக்கத்துக்குத் தேவையான ஆயுதங்களைக் கொள்முதல் செய்து தருபவராகவும் உள்ளார். இன்டர்போல் இவரையும் நீண்ட காலமாக தேடி வருகிறது. தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா என பல்வேறு நாடுகளுக்கு இவர் அடிக்கடி மாறிக் கொண்டிருப்பது வழக்கம். இந்த நிலையில், கேபியைப் பிடிக்க இன்டர்போலுக்கு இந்தியாவும், இலங்கையும் மீண்டும் அழுத்தம் கொடுத்துள்ளன. இதையடுத்து கேபியைக் கைது செய்ய இன்டர்போல் அதிகாரிகள் மும்முரமாக இறங்கியுள்ளனராம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

One thought on “கேபி என்ற பத்மநாதனுக்கு இன்டர்போல் வலை!

  1. பாவம் இந்த மனுசன்….
    இவரும் இப்போ துரோகி ஆகிவிட்டார்……
    தமிழக அரசியல் கோமாளிகள் இவரை துரோகி ஆக்கியது தான் வேடிக்கை…

Leave a Reply

Previous post அம்பாந்தோட்டையில் 304டெங்கு நோயாளர்கள்
Next post பொட்டு அம்மான் உயிரோடு உள்ளார்?: எங்கே?