ஐ.நா.மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு அமோக வெற்றி!! 29 ஆதரவு, 12 எதிர்ப்பு!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை கொண்டு வந்த தீர்மானம் 29 வாக்குகளால் அமோக வெற்றியை பெற்றது. இலங்கைக்கு ஆதரவாக 29 நாடுகளும், எதிராக 12 நாடுகளும் வாக்களித்தன. 47 உறுப்பினர்களைக் கொண்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் மூன்று அமர்வுகள் நேற்று நடைபெற்றன. மூன்றாவது அமர்வின் இறுதியில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது ஆறு நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. இந்தியா, பாகிஸ்தான், கியூபா உட்பட 29 இலங்கையின் நட்பு நாடுகள் ஆதரவாக வாக்களித்து இலங்கைக்கு அமோக வெற்றியை ஈட்டித்தந்தன. “இலங்கையை மீளக்கட்டியெழுப்புவதில் சர்வதேச சமூகம் உறுதுணையாக இருக்கிறதென்பதனை இந்த வெற்றி உறுதிப்படுத்தியிருக்கிறது” என அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஜெனிவாவிலிருந்து கூறினார். “ஐக்கிய நாடுகள் பேரவையில் இலங்கைக்கு கிடைத்துள்ள வெற்றி மனித உரிமைகளை பாதுகாப்பதற்கும் பயங்கரவாதத்தை அடியோடு ஒழிக்கும் ஜனாதிபதியின் நடவடிக்கைக்கும் கிடைத்த சர்வதேச அங்கீகாரம்” எனவும் அமைச்சர் சமரசிங்க மேலும் தெரிவித்தார். “மனித உரிமைகள் பாதுகாப்பும் இலங்கையின் முன்னேற்றத்திற்கு உதவுதலும்” என்ற தொனிப்பொருளில் இலங்கை அரசு மனித உரிமைகள் பேரவைக்கு சமர்ப்பித்திருந்த தீர்மானம் மூன்றாவது அமர்வின் போது கலந்துரையாடப்பட்டது. அதன் பின்னர் அதனை சற்று விரிவுபடுத்தி சமர்ப்பித்ததாகவும் பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க கூறினார். இலங்கை சமர்ப்பித்திருந்த தீர்மானத்துக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் ஜேர்மனி 9 திருத்தங்களை கொண்டு வந்தது. எனினும் இலங்கையின் நட்பு நாடான கியூபா திருத்தங்களை ஏற்றுக் கொள்வதை விரும்பாததுடன் எதிர்த்தது. இதனையடுத்து 17 பந்திகளைக் கொண்ட இலங்கையின் தீர்மானம் 29 பந்திகள் கொண்டதாக விரிவுபடுத்தப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. தீர்மானத்திற்கு ஆதரவாக 29 நாடுகளும், எதிராக 12 நாடுகளும் வாக்களித்தன. ஐரோப்பிய யூனியன், மெக்சிகோ, ஜப்பான், சிலி உட்பட 12 நாடுகள் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தன. நேற்று நடைபெற்ற பேரவையின் அமர்வுகளின் போது சில நாடுகள் இலங்கையுடன் குரோத மனப்பான்மையுடன் நடந்து கொண்டதாகவும் இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் சில தீர்மானங்களை கொண்டுவர முற்பட்டதாகவும் பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க கூறினார். இவ்வாறான செயற்பாடுகளுக்கும் மத்தியில் மத்திய கிழக்கிலுள்ள எமது நட்பு நாடுகளும், ஏனைய நட்பு நாடுகளும் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்தமை எமக்கு கிடைத்த பாரிய வெற்றியாகும் என்றும் பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க கூறினார். இலங்கை விவகாரம் தொடர்பாக ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் விசேட அமர்வு நேற்று ஜெனீவாவில் நடைபெற்றது. 47 உறுப்பு நாடுகளைக் கொண்ட இந்த அமைப்பில் 17 உறுப்பு நாடுகள் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் இந்த விசேட அமர்வு கூட்டப்பட்டிருந்தது.
9 thoughts on “ஐ.நா.மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு அமோக வெற்றி!! 29 ஆதரவு, 12 எதிர்ப்பு!”
Leave a Reply
You must be logged in to post a comment.
Can not blieve, Japan too???!!!$$##
Tamils are all around the world but don’t have a Tamil State….
Keep up the good work Nitharsanam.net and please forget the past and bring a unity around the Tamils.
என்ன செய்ய முடியும் இந்த அரசியல்வாதிகளை?
இதற்காக எத்தனை பேருடைய கால்களில்
(இந்தியாவுடன் சேர்ந்து)விழுந்தார்களோ? எவ்வளவு
ரத்தினக்கற்களையும் , சிங்கள,
இந்திய, அழகிகளையும்,???????
ஐ.நா………………ஒரு பொய் நா…………
இப்ப புலிவால்களின் ஒரே கனவு ராஜபக்சேயை மக்கள் கொலைக்காக தூக்கில் இடுவது தான்…. யாராவது அதை செய்ய மாட்டார்கள எண்டு வானீர் வடித்துக்கொண்டு காத்து கிடக்குதுகள்…..
கனவு காணுங்கள் எண்டு ஐயா அப்துல் கலாம் சொன்னதை இதுகள் இப்படியல்லவா புரிந்து வைத்திருக்குதுகள்…
சரணடைந்த புலித்தலைவர்களை கொலை செய்தது சிங்களவனின் வெறிச்செயல்….
ஆனால் அவனிடம் வேறு என்ன எதிர் பார்க்க முடியும்..? தாஜ் ஹோடேலில் விருந்தா?
புலிகளின் தோல்வி அவர்களாலேயே ஆரம்பிக்கப்பட்டது….. சகோதர தமிழனை வெட்டியும் சுட்டும் கொலை செய்யும் போதே .. மாற்று இயக்க தலைவர்கள் உயிருக்காக மன்றாடிய போது கொலை செய்யப்பட்ட போதே ஆரம்பித்து விட்டது…….
புலிகளை சிங்களவன் தோற்கடிக்க வில்லை….
அவர்களின் பாசிச வெறி…. தாமே ஏக பிரதிநிதி , மாற்று கருத்து உடையவர்கள் துரோகி.. இந்திய எதிர்ப்பு போன்ற கொள்கைகளே அவர்களை இன்று தோற்கடித்து விட்டது……
mr ,dilip kumar,you can get a state in canada ,malasia,u.u,e.u why don t u create a prapakaran and shout we want ealam,we want thamil thamil ealam ,we want thamilam. velaikkaraney tha thamil eealam why some other barking dogs ,tamil nadu fools, and bbctamil jokers all of them will give full support until you all join with you veera puthira nayagan annan prabakaran president, in hell ,–nadu veenuma nadu
எனக்கு இரண்டு கண்போனாலும் பறவாயில்லை….. எதிரிக்கு ஒரு கண்ணென்றாலும் போகவேண்டும் என்ற மாற்றுக் குழுக்களி்ன் கொள்கை வாழ்க! !
என்றாலும் உப்புத் தின்றவன் யாராக இருந்தாலும் தண்ணீர் குடித்தே ஆகவேண்டும்.
அதுதான்… இவ்வளவு காலமும் பிரபா திண்ட உப்புக்கு… ஒரேயடியாக முள்ளிவாய்க்காலில் தண்ணி குடிச்சவராக்கம்…!
அசல் யாழ்ப்பாணத்து பனங்கொட்டைகளுக்கு கருத்து சுதந்திரம் என்றால் என்னவென்றும் புரியாது. கருத்து ரீதியாக பதில் சொல்லவும் தெரியாது. இந்த புக்கா விளக்கெண்ணைகளுக்கு தெரிந்ததெல்லாம் கொச்சை ஆங்கிலத்தில் நீ தமிழனுக்கு பிறந்தாயா? துரோகி சிங்களவினடம் காசு வாங்கி எழுதுறாயா? என்று கேட்பதை தவிர வேறு எதுவும் எழுத தெரியாது எப்பதான் கொஞ்சமாவது அறிவு வந்து கண் திறந்து நாகரீகமாக நாலு கருத்து சொல்லப்போகுதுகளோ!
பனங்கொட்டைகள் எதையாவது உருப்படியா சாதித்தார்களா? உருககுலைப்பதில்தான் பனங்கொட்டைகள் கெட்டிகாரர்கள்
நம்ப வேண்டியதை இந்த பனங் கொட்டைகள் நம்பாதுகள். பீலாக்களை நல்லா நம்பிவிடும் எமாளிக்கூட்டம்