வர்த்தகர் ஒருவரிடம் கப்பம்பெற முற்பட்ட மூன்று சந்தேகநபர்கள் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது!!

Read Time:1 Minute, 59 Second

வர்த்தகர் ஒருவரிடம் கப்பம்பெற முற்பட்ட மூன்று சந்தேகநபர்களை கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று கைதுசெய்துள்ளனர். இவர்களை நேற்றைதினம் கைது செய்துள்ளதாக கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். இந்தக் குழுவினர் பெற்றுக் கொண்டதாகக் கூறப்படும் 3.5லட்சம் ரூபா பணத்தையும் அதற்காக பயன்படுத்திய காரொன்றையும் கைப்பற்றியதாகவும் கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மேலும் தெரிவித்துள்ளனர். இந்த சந்தேகநபர்களில் பொலீஸ் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்ட கான்ஸ்டபிள் ஒருவரும் அடங்குவதாக மேற்படி பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர். அவர் சில காலங்களாக வடமேல் மாகாணத்தில் கடமையாற்றிய நிலையில் கடமையிலிருந்து இடைநிறுத்தப்பட்டதாகவும், இதன் பின்னர் இந்தக் கொள்ளையர்களுடன் சேர்ந்து கொண்டதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அத்துடன் இவர் தன்னைக் கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி என்று கூறிக்கொண்டே சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை தொடர்ந்து தடுத்து வைத்து விசாரணை செய்து வருவதாகவும் கொழும்பு குற்றப்புலனாய்வுப் பொலீசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சட்டவிரோதமான முறையில் ஆமைகளை வைத்திருந்த சீன பிரஜை கைது
Next post வெளிநாடுகளில் உள்ள விடுதலைப்புலிகளை கைதுசெய்ய அந்த நாடுகள் நடவடிக்கை: ரோஹித்த போகொல்லாகம