சட்டவிரோதமான முறையில் ஆமைகளை வைத்திருந்த சீன பிரஜை கைது

Read Time:1 Minute, 30 Second

சட்டவிரோதமான முறையில் ஆமைகளை வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் சீன பிரஜையொருவர் பொலிஸாரினால் கைதாகி அம்பாறை மாவட்ட நீதிமன்ற உத்தரவின் பேரில் அபராதம் விதிக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார் வீதி அபிவிருத்தி ஒப்பந்த நிறுவனமென்றில் சேவையாற்றும் குறிப்பிட்ட சீன பிரஜை 6பால் ஆமைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக இங்கினியாகலை பொலிஸார் தெரிவித்தனர் விசாரணையின்போது தலா ஆயிரம் ரூபா கொடுத்து கிராமவாசிகளிடமிருந்து இந்த ஆமைகளை விலைக்குத் தான் வாங்கியதாக அவர் கூறியதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர் இந் நபர் நேற்று அம்பாறை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது ரூபா2500 அபராதம் விதிக்கப்பட்டதோடு ரூபா 25 ஆயிரம் சரீரப் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார் ஆமைகள் நீதிமன்ற உத்தரவின் பேரில் பறிமுதல் செய்யப்பட்டு குளத்தில் விடப்பட்டது என மேலும் தெரிவிக்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

One thought on “சட்டவிரோதமான முறையில் ஆமைகளை வைத்திருந்த சீன பிரஜை கைது

Leave a Reply

Previous post ஐ.நா.மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு அமோக வெற்றி!! 29 ஆதரவு, 12 எதிர்ப்பு!
Next post வர்த்தகர் ஒருவரிடம் கப்பம்பெற முற்பட்ட மூன்று சந்தேகநபர்கள் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது!!