இடம்பெயர்ந்தவர்களுக்கு உதவ விரும்பும் நாடுகள் ஐ.நாவின் சீ.ஆர்.ஏ.பி என்னும் அமைப்பினூடாக அத்தியாவசியப் பொருட்கள், கூடாரங்கள், என்பவற்றை வழங்க முன்வர வேண்டும் -ஐ.நா செயலர்

Read Time:5 Minute, 6 Second

இடம்பெயர்ந்தவர்களுக்கு உதவ விரும்பும் உதவி வழங்கும் நாடுகள் ஐ.நாவின் சீ.ஆர்.ஏ.பி என்னும் அமைப்பினூடாக அத்தியாவசியப் பொருட்கள், கூடாரங்கள், என்பவற்றை வழங்க முன்வர வேண்டுமென ஐ.நா செயலாளர் நாயகம் பான்கீ மூன் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஐ.நா செயலாளர் நாயகத்தின் இலங்கை விஜயம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, இலங்கை அரசினால் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வரும் முயற்சிகளுக்கு ஐ.நா சபை ஒத்துழைப்பு நல்குவது உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் செலயாளர் நாயகம் பான்கீ மூனும் கலந்துரையாடினர். மோதல் காரணமாக உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளோர் பற்றி விவரிக்கையில், வவுனியா மற்றும் யாழ்ப்பாணத்தில் தங்கியிருப்போர்க்கு ஐ.நா தொடர்ந்தும் மனிதாபிமான நடவடிக்கைகளை முன்னெடுக்கும். தன்னார்வ தொண்டர் நிறுவனங்கள் தமது சேவைகளை வழங்க அரசாங்கம் தொடர்ந்தும் அனுமதியளிக்கும். இடம்பெயர்ந்தவர்களுக்கு மீளவும் இயல்பு வாழ்க்கையை பெற்றுக் கொடுப்பதற்கான அடிப்படைத் தேவைகள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் வாழ்வாதார தொழில்களைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தயாராகவுள்ளது. நிவாரணக் கிராமங்களில் தங்கியிருப்போரை கட்டம் கட்டமாக மீளக்குடியமர்த்தி அரசாங்கம் முன்வைக்கவுள்ள செயற்திட்டங்களை செவிமடுத்த செயலாளர் நாயகம் அதனை வரவேற்றார். மீளக்கு குடியமர்த்தும் செயற்பாடுகளை துரிதப்படுத்துவதற்கென கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளுக்காக அரசாங்கம் சர்வதேச சமூகத்தினரின் ஒத்துழைப்பை கோரியுள்ளது. மோதல்களுக்குப் பினரான நிலைமையை ஆராய்ந்த ஜனாதிபதியும் செயலாளரும் பெரும் எண்ணிக்கையான சிறுவர்கள் புலிகள் இயக்கத்தில் பலாத்காரமாக இணைத்துக் கொள்ளப்பட்டமை குறித்து கூடுதல் கவனம் செலுத்தினர். சிறுவர்களைப் படையில் சேர்த்துக் கொள்வது தெடர்பான தமது முழுமையான அதிருப்தியை ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார். மோதல்களின்போது படையினரிடம் சரணடைந்த அல்லுது விடுவிக்கப்பட்ட மேற்படி சிறுவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள புனாழ்வாழ்வு மற்றும் பாதுகாப்பு நிலையங்களில் யுனிசெப்பின் சிறுவர் நட்பு செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதியின் பான்கீ மூனிடம் தெரிவித்துள்ளார். படையினர் சேர்த்துக் கொள்ளப்பட்ட சிறுவர்களுக்கு புனர்வாழ்வளித்து அவர்களை மீண்டும் சமூகத்தில் சிறந்த பிரஜைகளாக உருவாக்குவதே இவற்றின் பிரதான நோக்கமெனவும் அவர் சுட்டிக்காட்டினார். யுனிசெப்புடன் இணைந்து அரசு மேற்கொள்ளும் செயற்திட்டங்களை வரவேற்ற பான்கீ மூன், வடக்கில் புலிகளின் படையில் சேர்;த்துக் கொள்ளப்பட்ட சிறுவர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் வகையிலான இதுபோன்ற பல கொள்கைகளையும் திட்டங்களையும் அரசாங்கம் தொடர்ந்தும் அமுல்படுத்த வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார். சர்வதேச தராதரங்களுக்கு ஏற்ப மனித உரிமைகளைப் பாதுகாக்கவும் ஊக்குவிக்கவும் இலங்கை திடசங்கற்பம் பூண்டுள்ளது. மனித உரிமைகளை சர்வதேசத்திற்கேற்ப செயற்படுத்துவதன் அவசியத்தை ஐ.நா செயலர் வலியுறுத்திக் கூறினார். இதற்கான நடவடிக்கைகளை இலங்கை எடுக்கும். இவ்வாறு கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

2 thoughts on “இடம்பெயர்ந்தவர்களுக்கு உதவ விரும்பும் நாடுகள் ஐ.நாவின் சீ.ஆர்.ஏ.பி என்னும் அமைப்பினூடாக அத்தியாவசியப் பொருட்கள், கூடாரங்கள், என்பவற்றை வழங்க முன்வர வேண்டும் -ஐ.நா செயலர்

  1. புலிகளுக்கு எண்டு புலம்பெயர் முகவர்கள் மக்களிடம் கொள்ளை அடித்த பணத்தை இதுக்கு செலவழிக்கலாமே?
    இல்லை தலைவர் இல்லை தானே எண்டு பதுக்கப்போகிரார்களா?

  2. Why ltte can’t help their people in this time? They were fighting for leadership and to show their power to the world. they didn’t fight for people. Real government is Sri lanka government. they r trying to help tamil people. if they not accept tamil people in sri lanka, now also the time is there, for killing whole tamil people. why ltte and ltte supporters not helping directly or indirectly to refugees??? before Prabaharan knows these will happen. but no any arrangement. he was believe weapons. don’t believe any weapons. This message is for whole Tamil people.

Leave a Reply

Previous post மோதல்களில் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை மேற்கொள்ள வேண்டும்: கனடா
Next post பத்தாயிரம் விடுதலைப்புலிகள் இராணுவத்தினரிடம் சரண்.. தனி முகாம்களில் தடுத்து வைப்பு!!