பிரபாரகன் கொல்லப்பட்டு விட்டார்: பத்மநாதன் அறிக்கை

Read Time:3 Minute, 35 Second

வன்னிப் பெரும் நிலப்பரப்பில் இறுதியாக நடைபெற்ற யுத்தத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டதாக விடுதலைப் புலிகளின் அனைத்துலக வெளியுறவுப் பேச்சாளர் எனக் கூறப்படும் செல்வராசா பத்மநாதன் அறிவித்துள்ளார். இராணுவத்தினருடன் நடந்த இறுதி யுத்தத்தில் அவர் வீரமரணத்தைத் தழுவிக்கொண்டதாகவும், தலைவர் ஏற்றிவத்த விடுதலை விளக்கு அணையாமல் அனைவரும் பாதுகாக்கவேண்டுமெனவும் பத்மநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 37 வருடங்களாகத் தலைவர் தொடர்ந்துவந்த விடுதலைப் போர் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும் அதில் கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் வீரவணக்க நிகழ்வை அதற்குரிய எழுச்சியுடன் அனுஷ்டிக்குமாறு அனைவரையும் வேண்டுவதாகவும், இன்று திங்கட்கிழமை முதல் ஒரு வாரத்தை வீரவணக்க வாரமாக அறிவிப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தலைவரின் வீரச்சாவையிட்டு எவரும் தம்மையோ அல்லது பிறரையோ வருத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாமெனவும் பத்மநாதன் என்பர் தனது அறிக்கையில் வேண்டுகோள்விடுத்துள்ளார். இறுதி யுத்தத்தில் உயிரிழந்த தளபதிகள் மற்றும் போராளிகளின் பெயர் விபரங்கள் விரைவில் வெளியாகும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் உயிரிழந்திருப்பதாக பத்மநாதன் அறிக்கை வெளியிட்டிருப்பதை மறுலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வை.கோபாலசாமி மற்றும் இலங்கை பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் ஆகியோர் கண்டித்துள்ளனர்.

பிழையான அறிக்கைகளை நம்பி மக்கள் ஏமாரவேண்டாம் எனவும் அவர்கள் தனித் தனியாக வெளியிட்டிருக்கும் அறிக்கைகளில் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

அதேநேரம், விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் உயிரிழந்துவிட்டார் என்பதை புலிகள் அமைப்பின் அனைத்துலக வெளியுறவுப் பேச்சாளர் பத்மநாதன் தம்மிடம் உறுதிப்படுத்தியதாக பி.பி.சி. செய்தி வெளியிட்டிருந்தது.

பிரபாகரனின் சடலம் எரிக்கப்பட்டு அஷ்தி இந்து சமுத்திரத்தில் கரைக்கப்பட்டுவிட்டதாக இராணுவத் தளபதி சரத் பொன்சேகா அறிவித்திருந்த பின்னணியிலேயே, பிரபாகரன் கொல்லப்பட்டதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

3 thoughts on “பிரபாரகன் கொல்லப்பட்டு விட்டார்: பத்மநாதன் அறிக்கை

  1. புலன்பெயர்ந்து வாழும் புலிகஆதரவாளர்களின் கவனஈர்ப்பு போராட்டங்களும், சாலைமறிப்பு போராட்டங்களும் புலிகளின் தலைவரை காப்பாற்ற தவறியிருந்தனத, பிரித்தானிய உட்பட சில மேற்கத்திய நாடுகளின் ஊடாக யுத்த நிறுத்தத்தினை ஏற்படுத்தி தலைவரை காப்பாற்றுவதற்கு புலிகளின் சர்வதேச தொடர்பாளர் பத்மநாதன் உட்பட பல முக்கியஸ்தர்கள் மேற்கொண்ட முயற்சிகளுக்கு இலங்கைஅரசு இணங்கவில்லை. பிரபாகரனின் உயிருக்கு ஏதாவது நிகழ்ந்தால் தமிழகத்தில் இரத்த ஆறு ஓடும்போன்ற புலி ஆதரவு தமிழ கட்சிகளின் மிரட்டல்களுக்கு இந்திய மத்தியஅரசு மசியவில்லை.
    இவ்வகையான ஒரு இக்கட்டான நிலையில் தமிழ்தேசியகூத்தமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சந்திரகாந்தன் பசில் ராஜபக்சேயுடன் இரகசிய பேரம் பேசலில் ஈடுபட ஆரம்பித்து இருந்தனர். அரசு முன்வைத்த நிபந்தனைகளை புலிகள் நிறைவேற்றும் பட்சத்தில் பிரபாகரனை அவருடன் சேர்த்து 10 பேர்களை அரசபடையினர் தப்பி செல்ல அனுமதிப்பது என்ற உடன்படிக்கைக்கு தமிழ் தேசிய் கூத்தமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவரும் பசில் ராஜபக்சேயுடன் உடன்பட்டு இருந்தனர்.
    புலி தலைவர்களை வெளிநாட்டிற்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகளை பத்மநாதன், புலி ஆதரவு தமிழக தலைவர் ஒருவர், ஐயிரோப்பிய சமாதான தூதுவர் ஆகியோர் மேற்கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது. அரசின் நிபந்தனைக்கு இணங்க புலிகள் ஒரு வாரத்திற்கு முன்னரே ஆயுத கிடங்கினை வெடிக்க வைத்து இருந்தனர். அடுத்த நிபந்தனையாக 16 ஆம் திகதி அவர்களுடன் வைத்திருந்த 15 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்களை செல்வதற்கு அனுமதித்து இருந்தனர். இதனை தொடர்ந்து 100மீற்றர் நீளமும் 200மீற்றர் அகலமும் உள்ள பிரதேசத்திற்குள் புலி தலைவர்கள் படையினரால் சுற்றி வளைக்கப்பட்டனர். புலி தலைவர்களை தப்பி செல்வதற்கு அனுமதிப்பது என்ற இரகசிய உடன்படிக்கைக்கு மாறாக அரச படையினர் அவர்களை சுற்றி வளைத்து இருந்தனர். பசில் ராஜபக்சே உறுதியளித்தமைக்கு மாறாக அரசபடையினர் புலி தலைவர்களை சுற்றி வளைத்ததும், பிரபாகரன் தனது செய்மதி தொலைபேசியில் பத்மநாதன் ஊடாக ஐரோப்பிய சமாதான தூதுவருடன் தொடர்பு கொண்டு நிலமையினை அறிவித்து இருந்தார். நிலைமை மோசமாகி போனதை சமாதான தூதுவர் உணர்ந்து கொண்டார், ஆனால் அவரினால் ஏதும் செய்ய முடியாத நிலையில் இருந்தார்.
    மாற்று வழியின்றி அரசியல் துறை பொறுப்பாளர் நடேசனும் சமாதான செயலக பணிப்பாளர் புலித்தேவனும் முன்வரிசையில் வெள்ளை கொடியுடன் செல்ல பிரபாகரன், பொட்டம்மான், சூசை உட்பட ஏனையோர் அவர்களை பின்தொடர்ந்து சென்று 17 ஆம் திகதி அதிகாலை அரசபடையினரிடம் சரண் அடைந்தனர். ஜனாதிபதி 17 ஆம் திகதி இலங்கை வந்த பின்னர் பசில் ராஜபக்சே கோத்தபாய ராஜபக்சே சரத் பொன்சேகா ஆகியோருடன் ஆலோசித்து விட்டு பிரபாகரன் உட்பட அனைத்து உயர்மட்ட தலைவர்களையும் கொல்வது என முடிவு எடுத்தனர்.
    சரண் அடைந்த புலி தலைவர்கள் விசாரனைக்கு உடபடுத்தப்பட்ட பின்னர் மிக குறுகிய தூரத்தில் வைத்து சுட்டு கொல்லப்பட்டனர். புலனாய்வு துறை பொறுப்பாளர் பொட்டம்மானிடம் கடந்த 26 வருட கால செய்திகளை சேகரிப்பதற்கு அரசபுலனாய்வுதுறையினருக்கு குறைந்தது 6 மாதம் ஆவது வேண்டும். பசில் ராஜபக்சே தமிழ் தேசிய கூத்தமைப்பினர் மாவை சேனாதிராஜா, கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சந்திரகாந்தன் ஊடாக புலி தலமையினை சாதூர்யமாக சரணடைய செய்து விட்டு நயவஞ்சகமாக சரிக்கப்பட்டது.

  2. வடமராட்சியில் வைத்து அரச படைகளினால் சுற்றி வளைக்கப்பட்ட நிலையில் பிரபாகரனின் உயிரை காத்த ராஜீவ் காந்திக்கு கிடைத்த பரிசுதான் அவரின் மீதான தற்கொலை தாக்குதல். இந்திய இராணுவத்திடமிருந்து காப்பாற்றிய பிரேமதாசவுக்கு பிரபாகரன் கொடுத்த பரிசுதான் அவரின் மீதான தற்கொலை தாக்குதல். கிட்டு எங்களுக்குள் இருக்கும் பிரசனைகளை நாம் பேசி தீர்போம் என ரெலோ தலைவர் ஸ்ரீ சபாரட்ணம் கோண்டாவில் குமரகோட்டத்தில் உள்ள குடிசை ஒன்றிற்கு வெளியே வைத்து உயிர் தஞ்சம் கோரிய போது புலிகள் செய்த கொலை எவ் வகையானது? மட்டக்களப்பில் புளொட் இயக்கத்துடன் சமாதான பேசுவதாக சென்று பேசி விட்டு மறுநாள் தமது அலுவலகத்திற்கு விருந்திற்கு வருமாறு அழைத்து விட்டு வீதியில் மறைந்திருந்து அந்த இயக்கத்தின் அரசியல் துறை பொறுப்பாளர் வாசுதேவா, இராணுவ துறை பொறுப்பாளர் கண்ணன் உட்பட 12 இற்கு மேற்பட்ட உயர்மட்ட தலைவர் கொல்லப்பட்டது, எவ் வகையான கொலை? பேச வாருங்கள் என புளொட்டின் தளப்பொறுப்பாளர் மெண்டிசை அழைத்து சென்று அவரை அடித்து கொன்றமையினை எவ் வகையான கொலையென அழைப்பது? புலிகளை ஆதரித்து வளர்த்து விட்ட அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் போன்றவர்களுடன் அமைதியான முறையில் பேசுவதாக கூறி மங்கையற்கரசி கொடுத்த தேனீரை அருந்தி கோரத்தனமாக கொலை செய்தமையினை எப்படி அழைப்பது? ஆண்டவனை வணங்கி கொண்டு இருக்கையில், விளக்கினை அணைத்து விட்டு ஆண்டவனின் ஸ்தலத்திலேயே வைத்து நூற்றுக்கணக்கான முஸ்லீம் மக்களை கொன்றொழித்தமையினை எவ்வாறு அழைப்பது?. வவுனியாவில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு காணிகளை வழங்கி குடியமர்த்திய பாரூக்கை கடத்தி சென்று அவர் விரும்பி சென்றதாக தெரிவித்து அவரின் படங்களை பிரசுரித்து விட்டு சுட்டு கொன்றமையினை எப்படி அழைப்பது? புலிகளின் தலைவர் எவ்வாறு ஏனைய அமைப்புக்களின் தலைவர்களை உறுப்பினர்களையும் நம்ப வைத்து நயவஞ்சகமாக கொன்றொழித்தாரோ அதே பாணியில் அவரின் கதையும் முடிக்கப்பட்டு விட்டது.

  3. பானையில் இருப்பதுதான் அகப்பையில் வரும்
    கத்தி எடுத்தவன் கத்தியால்தான் சாவான்
    கெடு குடி சொற்கேளாது
    முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
    தனவினை தன்னை சுடும்
    வினை விதைத்தவன் வினை அளப்பான்
    தர்மம் தலை காக்கும்
    உண்மை சுடும்

Leave a Reply

Previous post 131 கிலோ எடையுள்ள 15 குண்டுகள் வவுனியாவில் மீட்பு
Next post பத்மநாதனைக் கைது செய்ய வேண்டும்: அரசாங்கம்