இராணுவத்தின் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுப்பு

Read Time:4 Minute, 57 Second

இராணுவ முகாம்களிலிருந்து கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் வெளியில் சென்ற படைவீரர்கள் தொடர்ந்தும் வாவி ஓரங்களிலும், வயல் நிலங்களிலுமே உள்ளனர். இவர்கள் இன்னும் முகாம்களுக்குத் திரும்பவில்லை என்று இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்தார். பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் 3000 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டும், 6000 இராணுவ வீரர்கள் நிரந்தர அங்கவீனமுற்றும், மேலும் 25000 படைவீரர்கள் காயமடைந்துமுள்ளனர். எமது படைவீரர்கள் இவ்வாறான அர்ப்பணிப்புக்களை செய்ததினாலேயே பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க முடிந்தது என்று அவர் மேலும் தெரிவித்தார். தேசிய தொலைக்காட்சிக்கு நேற்று இராணுவத் தளபதி வழங்கிய பேட்டியில் மேலும் தகவல் தருகையில்; நான் இரட்சனிய சேனை க்கும் கூட பொறுத்தமில்லாத வன் என்று சிலர் கூறியிருந்தனர். அவர்களது மனோநிலைமை எங்களுக்குத் தெரியும். பயங்கரவாதத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட மனிதாபிமான நடவடிக்கைகள் தொடர்பாக பல்வேறு வகையான பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டன. ஆயுதம் ஏந்திய 10,000 புலிப்பயங்கரவாதிகளுடன் மாத்திரம் எமது படைவீரர்கள் போராட்டத்தை முன்னெடுக்கவில்லை. அதற்கு அதிகமானவர்களுடனும் போராட்டத்தை முன்னெடுத்தனர். பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் கொல்லப்பட்டவர்களில் 95 வீதமானவர்கள் இராணுவத்தினர் என்று தெரிவித்த தளபதி, 22 ஆயிரம் புலிப் பயங்கரவாதிகளை இராணுவத் தினராலேயே கொல்ல முடிந்தது. யுத்தத்தை முன்னெடுப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்கள், புலிகள் ஒரு சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பிற்குள் முடக்கப்பட்ட பின்னர் யுத்தத்திற்கு ஒத்துழைக்க முன் வந்தனர். புலிகளின் இயக்கத்திலிருந்து கருணா அம்மான் விலகியதால்தான் யுத்தத்தை வெற்றிபெற முடிந்ததென பலரது அபிப்பிராயம் உள்ளது. அவர் விலகியதால் ஏற்பட்ட நன்மையை அன்று அரசு பயன்படுத்தவில்லை. கிழக்கை மீட்டெடுக்கும் நடவடிக்கை கடந்த இரண்டு வருடங்களுக்க முன்னர் முன்னெடுக்கப்பட்டது. 2 ஆயிரம் புலிகள் அந்த சமயம் கொல்லப்பட்டனர். புலிப் பயங்கரவாதிகளுடன் செய்து கொள்ளப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தம் பயங்கரவாதிகள் ஆயுதங்கள், கப்பல்கள், தொடர்பாடல் கருவிகள், யுத்த தாங்கிகள், கவச வாகனங்கள் பெற முடிந்தது.

அவ்வாறு ஆயுதங்கள் கிடைக்கப் பெற்றதனால் தான் அதன் பிரதிபலனாக 5 ஆயிரம் படைவீரர்கள் உயிரிழக்க நேர்ந்தது. 80 ஆயிரம் இளைஞர், யுவதிகள் இராணுவத்தில் இணைந்து கொண்டனர். இதனால் தான் யுத்தத்தை வெற்றிகொள்ள முடிந்தது.

எதிர் காலத்திலும் இராணுவத்திற்கு ஆட்சேர்க்கவுள்ளோம். ஐந்து, பத்து வருடங்களில் ஓய்வு பெறும்முறையை கொண்டுவருவோம் என்றும் தெரிவித்தார்.

எனவே, எதிர்காலத்தில் இராணுவத்தில் இணைந்து ஒத்துழைப்பு வழங்குமாறும் இராணுவத் தளபதி வேண்டுகோள் விடுத்தார்.

இதேவேளை வடக்கில் மீட்டெடுக்கப்பட்ட பிரதேசத்தின் பாதுகாப்புக்கென ஐந்து வருட பாதுகாப்புத் திட்டம் ஒன்று உருவாக்கப்படவுள்ளது.

இராணுவத் தளபதி கிளிநொச்சி விஜயத்தின் போது இதற்கான கருத்துக்களை முன்வைத்திருந்ததாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

பாதுகாப்பை கருத்தில் கொண்டு தேவைக்கேற்ப முகாம்கள் அமைக்கப்படவுள்ளது எனவும் இராணுவப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சரணடைய இடைத்தரகராக செயற்படுமாறு புலிகள் என்னை மன்றாட்டமாக கேட்டிருந்தனர் -லண்டன் ரைம்ஸ் பத்திரிகை நிருபர் மேரி கொல்வின் கூறுகிறார்..
Next post 131 கிலோ எடையுள்ள 15 குண்டுகள் வவுனியாவில் மீட்பு