பிரபாகரனின் உடல் தகனம் செய்யப்பட்டு அஸ்தி இந்து சமுத்திரத்தில் எறியப்பட்டது .இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேக

Read Time:2 Minute, 33 Second

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உடலை இலங்கை பாதுகாப்புப் படையினர் தகனம் செய்து விட்டனர் என்று இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். சிங்கள வார இதழ் ஒன்றுக்கு அவர் பேட்டியளிக்கையில் தெரிவித்ததாக ஏ.ஏவ்.பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜெனரல் சரத் பொன்சேகா மேலும் கூறுகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்ற கடும் தாக்குதலையடுத்து செவ்வாய்க்கிழமை காலை பிரபாகரனின் உடல் அடையாளம் காணப்பட்டது. நாம் அதே பிரதேசத்தில் பிரபாகரனின் உடலைத் தகனம் செய்து அஸ்தியை இந்து சமுத்திரத்தில் எறிந்தோம். பிரபாகரன் இறக்கும் முன்னர் நாங்கள் யுத்தத்தில் வெற்றியடைந்து விட்டதாக நான் அறிந்து கொண்டேன் ஆனால் அவரது மரணம் ஊர்திஜமான பின்னர் நான் பெருமகிழ்சியடைந்தேன் என்று குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்தொழிக்கும் இலங்கையின் கோட்பாட்டில் படை நடவடிக்கைகளை மேற்கொண்ட சரத் பென்சேகா கிட்டத்தட்ட நான்கு தசாப்தகாலமாக இடம்பெற்றுவந்த கசப்பான யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதுடன் புலிகளின் முழுத் தலைமைத்துவமே கொல்லப்பட்டு விட்டது என்று கூறியுள்ளார். எவ்வாறாயினும் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் தலைவர் பொட்டு அம்மான் மற்றும் பிரபாகரனின் மனைவி மதிவதனி ஆகியோரின் சடலங்கள் இனங்காணப்படவில்லை. குறுகிய துண்டு நிலப்பகுதியில் ஓரங்கட்டப்பட்டிருந்த சுமார் 250குழிகளில் இந்த இருவரும் உள்ளடங்கியிருக்கலாம் என இராணுவ அதிகாரிகள்  கூறியுள்ளனர் ஏனெனில் இறுதிக்கட்ட போரில் இவர்கள் மீது பலத்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

One thought on “பிரபாகரனின் உடல் தகனம் செய்யப்பட்டு அஸ்தி இந்து சமுத்திரத்தில் எறியப்பட்டது .இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேக

  1. Thrown, So, You are proud of posting this news. Do all traiters, selfish asholes better know how the racist lions are going to treat you. There are no body to ask anything, no respect to any of you guys by both Tamils and Sinhala racist. Count your days, they don’t need you guys any more. As long as, you suck (K)oththa brothers,you guys will be ok. Someone suck their dick all day 24/7/365 may iritate them too. So better know …………..

Leave a Reply

Previous post பத்மநாதன் எம்.பிக்கு அவரது பிறந்த ஊரில் மக்கள் அஞ்சலி.. தம்பிலுவிலில் இன்று இறுதிக்கிரியை
Next post மோதல் பகுதிகளில் பணியாற்றிய வைத்தியர்கள் விசாரணைக்கு உபடுத்தப்பட்டனர்..!!