தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பில் அமெரிக்கா மீண்டும் வலியுறுத்து

Read Time:2 Minute, 3 Second

மஹிந்த ராஜபக்ஷ அமெரிக்க இராஜாங்க செயலாளர் தொலைபேசியின் ஊடாக தொடர்பு கொண்டு தமிழ் மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய அரசியல் தீர்வு குறித்து கலந்துரையாடியுள்ளார். ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் பான் கீ மூன் இலங்கை வரவுள்ள நிலையில் அவருடன் தொடர்பு கொண்டு உரையாற்றிய.பின்னரே ஹிலாரி கிளின்ரன் ராஜபக்ஷவுடன் தொடர்பு கொண்டு பேசியதாக தெரிவிக்கப்படுகிறது. பான் கீ மூனுக்கும் ஹிலாரி கிளின்றனுக்குமிடையிலான கலந்துரையாடலின் போது போருக்கு பின்னர் தமிழ் மக்களுக்கு அரசாங்கம் வழங்க வேண்டிய தீர்வுகள் குறித்து இருவருக்குமிடையில் இணக்கம் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை இதன் பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய ஹிலாரி கிளின்ரன் சிறுபான்மை தமிழ்மக்களுக்கு அதிகாரப்பகிர்வினை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அத்துடன் இடம்பெயர்ந்துள்ள சுமார் 300000 லட்சம் மக்களை துரிதகதியில் மீள்குடியேற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார். ஜனநாயக இலங்கைக்குள் அனைத்து மக்களுக்கும் ஏற்றவகையில் சமாதான தீர்வினை முன்னெடுக்க வேண்டும் என ஹிலாரி கிளின்டன் ஜனாதிபதியை கேட்டுக் கொண்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜனாதிபதியின் பாரியார் சிராந்தி ராஜபக்ச செட்டிகுளம் பிரதேச நிவாரணக் கிராமங்களுக்கு விஜயம்..
Next post செட்டிகுளம் மெனிக்காம் முகாமில் மீண்டும் தமது பணிகளை ஆரம்பித்த சர்வதேச செஞ்சிலுவைச் சங்கக்குழுவினர்..