சுடரொளி ஆசிரியர் வித்தியாதரன் தாக்கல் செய்த உரிமை மீறல் வழக்கு வாபஸ்

Read Time:1 Minute, 51 Second

தாம் கடத்தப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டமையை ஆட்சேபித்து உதயன் ‘சுடர் ஒளி பத்திரிக்கைகளின் ஆசிரியர் ந.வித்தியாதரனால் உயர் நிதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் மனு நேற்று வாபஸ் பெறப்பட்டது உயர்நீதிமன்றத்தில் நீதியரசர்கள் அசோக சில்வா சலீம் மர்சூர் பி.ஏ ரத்னாயக்க ஆகியோர் முன்னிலையில் இந்த மனு நேற்று எடுத்துக்கொள்ளப்பட்டது தாம் விடுதலைசெய்யப்பட்டிருப்பதால் இந்த மனுவைத் தொடர்வதற்குத் தாம் விரும்பவில்லை எனத் தெரிவித்து மனுதாரர் அனுப்பிய கடிதம் அவரது சட்டத்தரணியால் நேற்று நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது அதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் மனுவை வாபஸ் பெற அனுமதித்தது இதேசமயம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள வித்தியாதரனுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவது குறித்து முற்றாகப் பரிசீலித்து முடிவுசெய்யும் விவகாரம் பொலிஸ்மா அதிபரின் பரிசீலனை இருப்பதால் அதற்குத் தேவையான நடவடிக்கையை அவர் எடுப்பதற்கு இடமளித்து உயர் நீதிமன்றம் பணிப்புரை விடத்தது மனுதாரர் சார்பில் சட்டத்தரணி கௌரிசங்கர் தவராஜாவின் அனுசரனையுடன் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆஜரானார் என தெரிவிக்கப்படுகிறது

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தமிழர் அகதி முகாம்கள் அருமை!-பாராட்டும் விஜய் நம்பியார்
Next post சகலரும் ஏற்கக்கூடிய நிரந்தர அரசியல் தீர்வு விரைவில் சகல தமிழ் கட்சிகளுடனும் பேச்சு இந்திய அதிகாரிகளிடம் ஜனாதிபதி உறுதி