ஓமந்தை இடைத்தங்கல் முகாமில் கனகரெத்தினம் எம்.பி.. புலிகளின் முக்கியஸ்தர்கள் பலர் இராணுவத்திடம் சரண்!

Read Time:1 Minute, 42 Second

யுத்த பிரதேசத்தில் இருந்தபோது காணாமல் போன தாக தெரிவிக்கப்படும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ச. கனகரெத்தினம் குடும்ப சகிதம் ஓமந்தை இடைத்தங்கல் முகாமில் தங்கியிருப்பதாக வன்னி எம்.பி. சிவநாதன் கிஷோர் உறுதிப்படுத்தினார். இவரை விடுவிப்பது குறித்து தான் வன்னி இராணுவ தளபதியுடன் பேசியுள்ளதாகவும் கூறினார். இதற்கிடையில், புலிகளின் முக்கியஸ்தர்கள் பலர் இராணுவத்திடம் சரண் அடைந்துள்ளார்கள். இவர்கள் அனைவரும் வவுனியாவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளனர். விளையாட்டுத்துறை பொறுப்பாளர், கொள்கை முன்னெடுப்பு பிரிவு பொறுப்பாளர், பொருளாதாரதுறை பொறுப்பாளர், முன்னாள் சர்வதேச பேச்சாளர் உட்பட இருநூறுக்கு மேற்பட்ட புலி உறுப்பினர்கள் வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் தற்காலிக இடைத்தங்கல் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் சுதந்திர பறவைகள் அமைப்பினைச் சேர்ந்த பெண் புலி உறுப்பினர்கள் பலரும் படைத்தரப்பினரிடம் சரணடைந்துள்ளதாக தெரிவித்தனர். நேற்று புதன்கிழமை வவுனியாவில் 90 சதவீதமான வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு கிடந்தன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இலங்கை தமிழ் எம்.பி பத்மநாபன் மதுரையில் மரணம்
Next post இன்றுகாலை இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திரு.எம்.கே.நாராயணன், இந்திய வெளியுறவுச் செயலர் திரு.சிவ்சங்கர் மேனன் ஆகியோரைச் சந்தித்த ஈபிஆர்எல்எப், புளொட், த.வி.கூட்டணித் தலைவர்கள்!! (பத்திரிகை அறிக்கை)