நடேசனையும், புலித்தேவனையும் புலிகளே கொன்றனர்: பாலித கொஹண

Read Time:3 Minute, 4 Second

விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் மற்றும் சமாதானச் செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் ஆகியோர் சரணடைய முற்பட்டபோது விடுதலைப் புலிகளாலேயே சுட்டுக் கொல்லப்பட்டதாக இலங்கை அரசாங்கம் கூறுகிறது. இறுதி நேரத்தில் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் சரணடைவது தொடர்பாக அரசசார்பற்ற நிறுவனங்கள், சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் இலங்கை அரசாங்கப் பிரதிநிதிகளுக்கிடையில் மின்னஞ்சல்கள் மூலம் தகவல்கள் பரிமாறப்பட்டுள்ளன. இதற்கமைய நடேசனும், புலித்தேவனும் வெள்ளைக் கொடிகளுடன் சரணடைய முற்பட்ட போதே இராணுவத்தினர் அவர்களைச் சுட்டு கொன்றிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன. எனினும், இதனை மறுத்திருக்கும் இலங்கை அரசாங்கம், புலிகளின் முக்கியஸ்தர்கள் சரணடைய முற்பட்டபோது அவர்கள் புலி உறுப்பினர்களாலேயே சுட்டுக்கொல்லப்பட்டதாகக் கூறியுள்ளது. இதில் இலங்கை அரசாங்கம் சார்பில் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கொஹண பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தார். நடேசன் மற்றும் புலித்தேவன் ஆகியார் சரணடைய விரும்புவதாக வடபகுதியில் பணியாற்றிய சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களிலிருந்தும், வெளிநாட்டுப் பிரதிநிதிகளிடமிருந்தும் ஞாயிற்றுக்கிழமை மாலை தனக்குப் பல்வேறு தகவல்கள் கிடைக்கப்பெற்றதாக பாலித கொஹண பிரித்தானிய ஊடகமொன்றிடம் கூறினார். “இதற்கு ஒரே வழிதான் உண்டு. இராணுவ முறைப்படி கையில வெள்ளைக் கொடியுடன் பயமுறுத்தாத வகையில் மெதுவாக வந்து சரணடையவேண்டும் என நான் கூறியிருந்தேன்” என்று கொஹண தெரிவித்தார். அவ்வாறு அவர்கள் சரணடைந்தால் உயிர்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது தானே என நோர்வே அமைச்சர் இறுதியாகத் தனக்கு அனுப்பிய குறுஞ்செய்தியையும் பாலித கொஹண அந்த ஊடகத்திடம் காண்பித்துள்ளார். ஆனால், அவ்வாறு சரணடைய முற்பட்ட விடுதலைப் புலித் தலைவர்கள் இருவரையும் விடுதலைப் புலிகளே சுட்டுக் கொன்றதாக இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் மேலும் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

3 thoughts on “நடேசனையும், புலித்தேவனையும் புலிகளே கொன்றனர்: பாலித கொஹண

  1. டுக்க்லேஸ் & கருணா ??? எங்கள் தமிழ் நாடுக்கு தயவு செய்து வந்துடாதே… பணத்துக்காக விலை போன உனக்கும் நிச்சியமாக பச்சை தமிழன் தான் ……. உலை வைப்பான் ??? உனக்கு செருப்பு மாலை போடுகிறேன். விரைவில் வா ……நீ எப்படி ஸ்ரீலங்கா மந்திரி அன 29 வருஷம் parbhakaran கூட இருந்துட்டூ, ராஜீவ் காந்தி சாக அடிசிட்டூ இப்ப பொய் மன்னிப்பு கேட்க போறியா உனக்கு வெட்கம் இருந்தால் நீ செத்து போ>>>? தமிழனுக்கு தமிழனே எதிரி . கருணா ஒரு எட்டப்பன் . போராட்டத்தில் இறங்கிவிட்டால் வெற்றியோ தோல்வியோ தலைவன் சொல்லுக்கு கட்டுப்பட வேண்டும் . கருணா தமிழன் என்று சொல்லவே நான் வெட்கப்படுகிறேன்… இனி நீ ஈழ தமிழர்களை காப்பாற்றுவாயா?. எட்டப்பனின் பேரனே ….><….? எங்கள் தலைவன் பிரபாகரன் சாகவில்லை ..வருவர் வெல்வார்,,, தமிழீழத்தை மலரவைபார் தலைவன்…

  2. தலைவரின் மரணத்துக்கு இந்த புலம் பெயர் மக்களும் ஒரு காரணம்…
    சும்மா தன்னிலை உணராது ஆர்பாட்டம் செய்ததால் ,தலைவரை காப்பாத்த முடியவில்லை…

    புலிகள் பலம் இழந்து விட்டாகள் எண்டு உணர்ந்து தமது ஆர்பாட்டங்களை வேறு விதமாக செய்து இருந்தால், ஒரு வேளை பெரிய புள்ளிகளை காப்பாத்தி இருக்கலாம்,,

    இனியாவது, உண்மை நிலையை ஏற்றுக்கொள்ளுங்கள்…. உங்களுக்குள்ளேயே கற்பனை செய்து சுயஇன்பம் காண்பதை விடுங்கள்…….

  3. கடந்த 30 வருட காலமாக கட்டி வளர்த்து ஆகாயப்படை, தரைப்படை, கடற்படை அனைத்தையும் உருவாக்கி எதையும் சாதிக்க முடியாமல் மக்களையும் அழித்து தாங்களும் அழிந்து மீண்டும் ஈழத்தை பிடித்து தரப்போகிறார்கள் என்பதை மக்கள் நம்புகிறார்கள் என்றால் அவர்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.

Leave a Reply

Previous post பிரபாகரனது மரணத்தை ஓர் அரக்கனது இறப்பாக எடுத்துக் கொள்ளுங்கள்! -அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கருத்து
Next post பிரபாகரன் சுட்டுக் கொண்டு வரப்பட்டாரா? கொண்டு வரப்பட்டு சுடப்பட்டாரா? ஐயப்பாடுகளும், அதிருப்திகளும்.. நெளிவுகளும்… தெளிவுகளும்…!!! (“அதிரடி” இணையத்தில் வெளியானது)