நந்திக்கடல் பகுதியில் பிரபாகரன் உடல் புதைப்பு!

Read Time:1 Minute, 14 Second

விடுதலைப் புலிகளி்ன் தலைவர் பிரபாகரனின் உடலை நந்திக்கடல் பகுதியிலேயே பிற புலிகளி்ன் உடல்களோடு சேர்த்து புதைக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. அவரது உடல் கண்டெடுக்கப்பட்ட அதே இடத்திலேயே உடல் புதைக்கப் படவுள்ளது. அவரது உடலை தனியாகப் புதைக்காமல் அங்கு கிடைத்த மற்ற உடல்களோடு சேர்த்து புதைக்கவுள்ளதாகவும் இலங்கை அறிவித்துள்ளது. இந்த உடலை பிரபாகரன் உறவினர்கள் யாருமே இதுவரை சொந்தம் கொண்டாடவில்லை. இதுபோன்ற மிக முக்கியமான தலைவர் பிரபாகரன் உடலைப் பார்க்கக் கூட வேறு சர்வதேச ஊடகங்களோ, நடுநிலையாளர்களோ இதுவரை அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பிரபாகரன் புதைக்கப்பட்ட இடத்துக்கென்று தனியான அடையாளம் எதுவும் கிடைத்துவிடக் கூடாது என்பதற்காக இப்படி கூட்டாக புதைக்கவுள்ளது இலங்கை ராணுவம் .

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

11 thoughts on “நந்திக்கடல் பகுதியில் பிரபாகரன் உடல் புதைப்பு!

  1. ஏன் ஐயா அவரசரமாக புதைப்பு?
    சந்தேகம்… சந்தேகம்….சந்தேகம்….

  2. நீங்களும் இப்ப சும்மா உங்க எண்ணப்படி நியூஸ் போடுகின்றீர்கள?
    தலைவர் , கிளீன் ஷேவ் எல்லாம் எடுத்து இருக்கிறார்….

    தலைவரின் மரணத்தில் சந்தேகம் தான்… நம்ப முடியாது………

  3. 1984 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதலாம் திகதி பிரபா மதிவதனியை திருமணம் முடித்து ஆறரை மாதத்தில் 1885ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பதினெட்டாம் திகதி சார்லஸ் அந்தோனி பிறந்தான். கிட்டுதான் மதிவதனியையும் மற்றும் வினோஜா, ஜெயா, லலிதா ஆகியோரை யாழ்ப்பாணத்தில் இருந்து கடத்தி இந்தியாவிற்கு கொண்டு வந்தான்.
    பின்னர் கிட்டுவை கிரனைட் வீசி புலியை சேர்ந்தவர்களே கொல்ல முயன்ற போது காலை இழக்க நேரிட்டது என்று பலரும் ஒரு நம்ப முடியாத கதையை சொன்னார்கள் .இது பின்னர் மாத்தையாதான் செய்ததாக சிலர் சொன்னார்கள்.
    இப்போது அரசாங்கம் கொல்லப்பட்ட சார்லஸ் அந்தோனி என்று பிரசுரித்த படம் கிட்டு மாதிரி இருக்கிறான் என்று பலரும் சொல்வதை தயவு செய்து நம்பவேண்டாம்.
    பிரபாகரன் நிழலை கூட இராணுவம் நெருங்க முடியாது
    பிரபாகரன் உள்ளே விட்டு அடிக்கத்தான் போறான்.
    நம்புங்கள் நாளை தமிழ் ஈழம் பிறக்கும்

  4. அதிர்ச்சி தகவல

    சார்லஸ் அந்தோனி என்று அரசாங்கம் அடையாளம் காட்டிய உடலின் DNA யும் பிரபாகரன் என்று அடியாளம் காணப்பட்ட உடலின் DNAயும் வித்தியாசம் என்று மருத்துவ ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

    கிட்டுவின் பழைய படத்தை திருகுதாளம் மூலம் மாற்றி இராணுவம் சார்லஸ் அந்தோனி என்று வெளியிட்டிருக்கிறார்கள் இதை நம்ப வேண்டாம்
    தலைவர் இருக்கிறார்
    நம்புங்கள் நாளை தமிழீழம் பிறக்கும்

  5. வைக்கலில் செய்த Body யை எரிச்சாத்தான் என்ன??

    புதைச்சா தான் என்ன?

  6. கோண்டாவில், அன்னங்கை எனும் இடத்தில் பிரபாவின் கட்டளைக்கு அடிபணிந்து கிட்டண்ணா மண்டையில் போட்ட ஸ்ரீசபாரத்தினத்தை அந்த இடத்திலேயே ரயர் போட்டுக் கொளுத்தியபோது எத்தனை உள்ளங்கள் குமுறியிருக்கும்… அப்போதைய குமுறல்களின் வெளிப்பாடே இன்றைய பிரபாவின் மரணமும், அவலங்களும்.

    “அரசன் அன்று கொல்வான்… தெய்வம் நின்று கொல்லும்”
    (உணர்ந்துகொள்ளுங்கள்… இல்லையேல் உணர்வீர்கள்)

  7. தலைவரின் மரணத்துக்கு இந்த புலம் பெயர் மக்களும் ஒரு காரணம்…
    சும்மா தன்னிலை உணராது ஆர்பாட்டம் செய்ததால் ,தலைவரை காப்பாத்த முடியவில்லை…

    புலிகள் பலம் இழந்து விட்டாகள் எண்டு உணர்ந்து தமது ஆர்பாட்டங்களை வேறு விதமாக செய்து இருந்தால், ஒரு வேளை பெரிய புள்ளிகளை காப்பாத்தி இருக்கலாம்,,

    இனியாவது, உண்மை நிலையை ஏற்றுக்கொள்ளுங்கள்…. உங்களுக்குள்ளேயே கற்பனை செய்து சுயஇன்பம் காண்பதை விடுங்கள்…….

  8. மாற்று கருத்து கொண்டிருந்தாலும்… தன் கொள்கையில் இறுதிவரை நிண்டு யாருக்கும் விலை போகாமல் மரணித்த அவருக்கு வீர வணக்கம் செலுத்தத்தான் வேண்டும்.
    May his soul rest in peace……

  9. அப்படிபோடு நக்கீரா மற்றவன் கால் பிடித்து வாழாமல்

    கடைசிவரை போராடிய வீரத்தமிழன்….

Leave a Reply

Previous post பிரபாகரன் மறைந்தது வருத்தம் தான்!!! -கூறுகிறார் கருணா
Next post கனகரத்னம் எம்பியின் நிலை குறித்து கூட்டமைப்பு கேள்வி