பிரபாகரன் என்ன ஆனார்???

Read Time:1 Minute, 48 Second

விடுதலைப் புலிகளின் தலைமை உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பலருக்கு என்ன நடந்தது என்பது தொடர்பாக பல்வேறு ஊகங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. பாதுகாப்பு வலயப் பிரதேசத்துக்குள் உள்ள ஒரு கட்டடத்துக்குள் முக்கிய தலைவர்கள் பலரும் இருந்து அதனை வெடிக்கவைத்துத் தற்கொலை செய்துகொண்டதாக ஊர்ஜிதப்படுத்தப்படாத தகவல்கள் பரவிவருகின்றன. புலிகளின் கதை முடிந்து விட்டது என்ற செய்தியை ஜனாதிபதியின் சகோதரரும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான கோத்தபாய ராஜபக்ச ஜோர்தானிலிருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு தொலைபேசி வாயிலாக அறியத் தந்ததாகவும், இதன் பின்னரே அவர் தனது பயணத்தை இடையில் முடித்துக்கொண்டு உடனடியாக நாடு திரும்பியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி மகிந்தவுக்கு தெரிவித்த தகவல்கள் தொடர்பான மேலதிக விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை. களநிலைமைகள் தொடர்பான தகவல்கள் அரசாங்கத்துக்கு இப்போது முழுமையாகத் தெரியும் எனவும், எனினும், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நாட்டு மக்களுக்கு அதனை உத்தியோகபூர்வமாக அறிவிப்பதற்காக இன்னமும் இரகசியம் பேணப்பட்டு வருவதாகவும் தெரியவருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

6 thoughts on “பிரபாகரன் என்ன ஆனார்???

  1. ஹிஹி ..சிரிப்பதை தவிர வேறு வழி தெரியவில்லை…
    தமிழரை எளிதில் ஏமாற்றலாம் போல கிடக்கு….
    நம்புங்கள்….இன்னமும் தமிழ் ஈழம் கிடைக்கும் எண்டு…….
    ஆனால் அரசனை நம்பி புருஷனை கை விட்டு விட வேண்டாம்…

  2. தலைவரையே சாகடிச்சாச்சு… இனி நிழலை என்னத்துக்கு…
    நிழலை நீங்களே வைச்சிருங்கோ!

Leave a Reply

Previous post படையினரின் முற்றுகை இறுகியது; நாடளாவிய ரீதியில் கொண்டாட்டங்கள்..
Next post விடுதலைப் புலிகளின் தலைவர் சுட்டுக்கொலை!! : பாதுகாப்பு அமைச்சு