வடுவாக்கல் பகுதியிலிருந்து 10,000 பொதுமக்கள் படையினரால் மீட்பு

Read Time:2 Minute, 11 Second

வடுவாக்கல் கரையோரப்பகுதியிலிருந்து இதுவரை 10,000பொதுமக்களை இராணுவத்தின் 59ஆம் படையணி மீட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியிலிருந்து பெருமளவிலான பொதுமக்கள் இராணுவத்தினரிடம் வந்து தஞ்சமடைகின்றனர். இவ்வாறு தப்பி வருபவர்கள் மீது விடுதலை புலிகள் சிறிய ஆயுதங்கள் கொண்டு தாக்குவதாகவும்,இதன் போது காயமடைபவர்கள் உடனடி வைத்திய சிகிச்சைகளுக்காக அனுப்பி வைக்கப்படுவதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இலங்கையின் மூன்று தசாப்த காலமாக விடுதலை புலிகளின் வசமிருந்த வடகரையோரத்தை இராணுவத்தின் 58ஆவது, 59ஆவது படையணியினர் நேற்று சனிக்கிழமை காலை பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து முற்றாக விடுவித்துள்ளதாகவும், இதனைத்தொடர்ந்து புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் பல தலைவர்களும் பதுங்கியிருக்கும் இடததை இராணுவத்தினர் சுற்றி வளைத்துள்ளனர் எனவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவிக்கின்றது. கடந்த மூன்று தினங்களாக தென்கரையோரமாக நகர்ந்து வந்த 58ஆவது படையனியினர் நேற்று காலை 59 ஆவது படையணியினருடன் இணைந்துள்ளதாக முல்லைத்தீவிலிருந்து களநிலைத்தகவல்கள் தெரிவிக்கின்றன. 58ஆவது டிவிசன் படையினர் இதன்போது 4300 பொதுமக்களை .இவர்களுள் புலிகளின் சிரேஷ்ட தலைவர்களின் குடும்பத்தினர் மற்றும் விடுதலை புலி உறுப்பினர்களும் அடங்குவதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவிக்கின்றது

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

4 thoughts on “வடுவாக்கல் பகுதியிலிருந்து 10,000 பொதுமக்கள் படையினரால் மீட்பு

  1. ஆனால் சூசை என்பவன் விடுத்த ஒலிநாடாவில் மக்கள் சாகினமாம்.
    இவங்களுக்கு ஏலாட்டி விட்டுட்டு போறதுக்கு ஏன் அதுக்குள்ளே இருக்கிறாங்கள்.. மடையர்கள்..
    அவரின் பேச்சை கேக்க சிரிப்பா வருது…. உயிர் பிச்சை வேண்டி நிக்கினம்….

  2. இன்னும் மற்றவர் வாயை மூடுவதிலேயே இருங்கள்… உண்மை நிலையை எப்போ புரிந்து கொள்ளபோகிறீர்கள்?

    புலிகளின் அறிக்கைகள் தமிழரை இன்னும் அவமானப்படுத்தும் செயல்…
    அவர்களுக்கு என்ன.தம்மை காக்க எதையும் செய்வார்கள்…
    உதாரணம் தற்போதைய மக்கள் பாசம்…

Leave a Reply

Previous post ஈழப் போர் கசப்பான ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது -விடுதலைப் புலிகள்
Next post யேர்மனியில் டுசில்டோவ் பிரதான தொடருந்துப் பாதைகள் பெண்களையும் குழந்தைகளையும் முன்னிறுத்தி புலிகளால் முற்றுகை..!! (புகைப்படங்கள் இணைப்பு)