இதுவே எனது இறுதிச் சந்திப்பு! தற்கொலையே என் முடிவு!!இறுதியாக விடைபெறும் போது புலிகளின் கடற்படை தளபதி சூசை தன் மனைவியிடம் தெரிவிப்பு!..

Read Time:1 Minute, 17 Second

புலிகளின் கடற்படை தளபதி சூசையின் மனைவி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தமை தெரிந்ததே! முள்ளி வாய்க்கால் பகுதியில் இருந்து தப்பி செல்ல முற்பட்ட வேளையில் கடற்படையினரால் கைது செய்து செய்யப்பட்ட சூசையின் மனைவி பல முக்கியமான தகவல்களை வெளியிட்டுள்ளார்.தலைவர் பிரபாகரன் இன்னமும் அங்கேதான் இருப்பதாக தெரிவித்த சூசையின் மனைவி தனது கணவன் தன்னிடம் தெரிவித்திருந்த இறுதி வார்த்தைகளையும் தெரிவித்திருந்தார். இதுதான் தனது இறுதி சந்திப்பு என்றும், தலைவர் இறுதியில் தற்கொலை செய்து கொள்வார் என்றும், அந்த வழியே தனது வழி என்றும் தெரிவித்திருந்த சூசை இராவத்தினால் தமதுஉடல்களை கூட கைப்பற்ற முடியாது என்றும் தனது கணவன் சூசை தெரிவித்திருந்ததாக சூசையின் மனைவி தகவல் வெளியிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

4 thoughts on “இதுவே எனது இறுதிச் சந்திப்பு! தற்கொலையே என் முடிவு!!இறுதியாக விடைபெறும் போது புலிகளின் கடற்படை தளபதி சூசை தன் மனைவியிடம் தெரிவிப்பு!..

  1. தற்கொலை தாக்குதல்களுக்கு எம்பிள்ளைகளை அனுப்பி பல்லாயிரக்கணக்கான வரை பலி கொண்ட திண்டு வளைந்து நீந்தி அனுபவிச்ச தலைவர்கள் தம் பிள்ளைகளையும் மனைவிமாரையும் கடைசி இரவு வரை தம் அருகில் வைத்திருந்து விட்டு இலங்கை இராணுவத்திடம் அவர்களை ஒப்படைத்து விட்டு
    இராணுவத்துடன் தாம் மோத பயந்து தற்கொலை செய்து போராட்ட வாழ்கையை முடித்து கொண்டனர்.

    சுபம் சுபம்

    முற்றும்

  2. புலிகளோ யுத்தம் இல்லாத போது மக்கள் சலிப்படைந்து போவார்கள் என்றும் போராளிகள் மன மாற்றம் ஏற்படக் கூடாது என்பதற்காகவும் அடுத்த இயக்கத்தவரையாவது போட்டுத் தள்ளுவதில் ஊக்கம் கொடுத்து. அந்த போர் மூடில் போராளிகளை வைத்திருக்க முயன்றார்கள்.சொறிந்தவன் கை சும்மா இருக்காது என்பது போல போரையும் வலிந்து தொடுத்தனர்.
    புலிகளது ஆயுதத்துக்கு பயந்தே புலி வாலை விட முடியாமல் அநேகர் இருந்தனர்அவர்கள் 30 வருடத்தில் பட்ட துன்பம் ஏராளம். ஆனால் அதுக்கு அவர்களுக்கு பட்டதோஅல்லது கிடைத்த நின்மதியோ ஒரு துளி கூட கிடையாது. ஆயுதம் மக்களின் உனர்வுகளையும் உரிமைகளையும் அடக்கியதே தவிர, அதை மக்களுக்கு எதுவும் பெற்று தரவில்லை. இறுதி நேரத்தில் கூட மக்களில் எந்தவித அக்கறையும் இல்லாமல் ஆயுதத்தை காப்பாற்றவே புலிகளின் வியாபாரிகள் உலகம் முளுவதும் ஓலமிட்டனர்.
    யுத்தத்தின் பின் சமாதானம் இப்படியும் வரும்? அமெரிக்க ஜப்பான் போரின் பின்னும் , ஜெர்மன் ஐரோப்பிய போரின் பின்னும் சமாதானம் வந்தது. அங்கே வாழும் மக்கள் வெறுத்து விட்டால் அடுத்தவரால் ஒன்றும் செய்ய முடியாது. இன்று ஜேவீபீ மற்றொரு புரட்சிக்குத் தயாரில்லை. இலங்கை வாழ் தமிழரும் இன்னொரு இழப்புக்கு தயாரில்லை.

    பிற்குறிப்பு
    முன்னாள் பிஸ்டல்குழு தலவன் தமிழ்செல்வனின் மனைவி கூட தன புதிய காதலனுடன் புது வாழ்வு அமைக்க ராணுவத்திடம் சரண் அடைந்து விட்டார்.

  3. சூசை இராணுவத்திடம் பிடிபட்டு உள்ளான். வெளி நாட்டுக்கு சட்ட லைட் தொலை பேசியில் பிணக் கணக்கு சொல்லி பிலிம் காட்டிய டாக்டர்மார் பாட்டுபாடி உசுப்பேத்தி விட்ட சாந்தன் உட்பட பல பாடகர்கள் பல புலி கேணல் மார் எல்லாம் இராணுவத்திடம் பிடிபட்டு போனார்கள். இராணுவம் சுற்றி வளைத்ததை அடுத்து பிரபாகரன் பொட்டு மற்றும் பலர் தற்கொலை செய்து விட்டனர். மதிவதனியும் பிள்ளைகளும், தமிழ் செல்வனின் மனைவியும் புதிய காதலனும், சூசையின் மனைவியும் பிள்ளைகளும், இன்னும் பல புலி தலைவர்களின் குடும்பங்களும் இலங்கை இராணுவத்திடம் சரண் அடைந்து நல்ல பாதுகாப்பாகவும் சுகமாகவும் இருக்கிறார்கள். இவர்கள் தப்பி வரும்போது மட்டும் பின்னாலை சுடுவதற்கு ஒரு புலியும் இருக்கவில்லை.
    எம் பிள்ளைகளை தற்கொலை தாக்குதல்களுக்கு அனுப்பும் போது அவர்களுடன் கடைசியாய் சாப்பிட்டுவிட்டு படுத்துதூங்கின பயந்தாங்கொள்ளிகள் பேடிகள் இராணுவம் சுற்றி வளைத்ததும் பயத்தில் தற்கொலை செய்து குத்தகைக்கு எடுத்த போராட்டத்தை முடித்து கொண்டார்கள்.
    புலிகளின்தாகம் புலன்பெயர்ந்த தமிழ்ஈழத்தாயகம்!
    ஸ்டாப் சுயிசைடு!

  4. Please don’t trivialise the doctors’ services. Really I salute them. Even though, the LTTE’s control and guns, they have served well. Really we should salute them.
    When in Rome, do as the Romans do……
    No one can against the strong terrorist in their controlled area.

Leave a Reply

Previous post புலிகள் சரணடையத் தயார் எனும் கே.பி.யின் அறிவிப்பு.. புலிகளின் காலம் கடந்த “அரசியல்” ஞானம்!!!
Next post விடுதலைப்புலிகளை முற்றாக தோற்கடித்து விட்டதாக ஜனாதிபதி தெரிவிப்பு