வில்பத்து விலங்குகள் சரணாலயத்தில் உல்லாசப்பயணம் மேற்கொண்டவர்கள் நிலக்கண்ணியில் சிக்கி மரணம்

Read Time:2 Minute, 29 Second

Claymore_5.gif
வில்பத்து சராணாலயத்தில் உல்லாசப்பிரயாணிகளாகச் சென்றவர்கள் (27.05.06) மர்மமான முறையில் நிலக்கண்ணி வெடிவிபத்தில் சிக்கி மரணமாகியுள்ளார்கள். இச்சம்பவத்தில் 7 பேர் பலியானதாகத்தெரிவிக்கப்படுகிறது. இதில் 2 பேருடைய சடலங்கள் உடற்பாகமற்ற இருவரின் தலைகளும் உருக்குலைந்த நிலையில் கண்டுபிடிக்கபட்டதாகத் தெரிவிக்கப்படுகிது. கண்டெடுக்கப்பட்ட சடலங்களிலிருந்தும் உடற்பாகங்களிலிருந்தும் 5பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களில் இருவர் பெண்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
பெயர்விபரங்கள் வருமாறு சண்டி ஆசீர்வாதம் ,அனுலா ஆசீர்வாதம் ,டெரல்பெரேரா ,நிகால் சில்வா, நந்தா அபயசூரிய, ஹென்றி ஜஸ்டின் இவர்கள் அனைவரும் றோஸ்மீட் பிளேஸ் கொழும்பு 7 ஐச் சேர்ந்தவர்கள் மற்றும் வழிகாட்டியான அனுரா திசாநாயக்காவும் கொல்லபட்டுள்ளார்.
நொச்சியாகம பொலிசார் இராணுவத்தினரின் உதவியுடன் நேற்று அதிகாலை 5.30 மணி முதல் மாலை 3.30 வரை நடத்திய தீவிர தேடுதலின் போதே சடலங்களும் உடற்பாகங்களும் காட்டுப்பாதையில் 40கிலோமீற்றர் மீற்றர்காட்டின் உள்பகுதியில் தேடுதல் நடத்தியே கண்டு பிடித்ததாக அறியப்படுகிறது.
வில்பத்து என்பது மன்னார் வவுனியா புத்தளம் அனுரதபுரத்தை எல்லைகளாகக் கொண்ட இலங்கையின்; பிரபல விலங்குகள் சரணாலயம் என்பது குறிப்பிடத்தக்கது. அண்மைக்காலமாக வில்பத்து சரணாலயம் ஊடாக உல்லாசப் பயணிகளின் வருகையால் பெருமளவு வருமானம் இலங்கை அரசுக்கு கிடைக்கப பெற்றதாகவும் இததை; தடுக்கும் நோக்கிலேயே திட்டமிட்டு இக்கிளைமோர் குண்டுத்தாக்குதல் நிகழ்த்தப்பட்டிருக்கலாமெனவும் சந்தேகிக்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post உரிமைகுரல் எழுச்சிப் பேரணி தொடர்பாக… புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கு
Next post திருமலை அரச அதிபராக இராணுவ அதிகாரி நியமனம்: புலிகள் எதிர்ப்பு