விருதுநகரில் காங். வெற்றி – 17,000 வாக்குகள் வித்தியாசத்தில் வைகோ தோல்வி

Read Time:1 Minute, 44 Second

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விருதுநகர் தொகுதியில், 17 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தார். முன்பு சிவகாசி என இருந்த தொகுதி தற்போது விருதுநகராக்கப்பட்டது. அதில் வைகோ போட்டியிட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் மாணிக் தாகூரும், கார்த்திக்கும் முக்கிய வேட்பாளர்களாக போட்டியிட்டனர். தேமுதிக சார்பில் மாபா பாண்டியராஜன் நிறுத்தப்பட்டார். வாக்கு எண்ணிக்கையின் தொடக்கம் முதலே வைகோவுக்கும், மாணிக் தாக்கூருக்கும் இடையே கடும் இழுபறி இருந்தது. ஓரிரு சுற்றுக்களில் மட்டுமே வைகோ முன்னணியில் இருந்தார். மற்ற சுற்றுக்களில் தாகூர் முன்ணியில் இருந்து வந்தார். ஆரம்பத்தில் இருவருக்கும் இடையிலான வித்தியாசம் மிக மிக குறைவாகவே இருந்தது. எனவே கடைசி நேரத்தில் எப்படியும வைகோ வென்று விடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் போகப் போக சற்று வாக்கு வித்தியாசம் கூடியதால் வைகோவின் தோல்வி உறுதியானது. இறுதியில் 17 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வைகோ தோல்வியைச் சந்தித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

2 thoughts on “விருதுநகரில் காங். வெற்றி – 17,000 வாக்குகள் வித்தியாசத்தில் வைகோ தோல்வி

  1. VERY GOOD VAIKO IS A ANTI( INDIA) NATIONAL ELEMENT. HE MUST BE DEFEATED. HE ALWAYS SUPPORT TERRIOST ONLY.

  2. ஈழமக்கள் அழிவை காட்டி ஆவேசமாக பேசின இவர்களுக்கு மக்கள் நல்ல பாடம் புகட்டி விட்டார்கள்…
    இந்திய மக்கள் இனி இந்த பிசுபிசுப்பான வார்த்தைகளை நம்பமாட்டார்கள் எண்டு காட்டி விட்டார்கள்….
    அவர்கள் திருந்தி விட்டார்கள்… நாங்கள் எப்போ திருந்த போறோம்?

    காங்கிரசுக்கு வாழ்த்துக்கள்…..

Leave a Reply

Previous post புலிகளின் பாடல்கள் பாடி புகழ் பெற்ற சாந்தன் கைது; பிரபாகரன் முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ளார்: சூசையின் மனைவி
Next post வெள்ளவத்தை தொடர்மாடி வீட்டில் 4 தற்கொலை அங்கிகள் மீட்பு