மிகவும் மோசமான நிலையிலிருக்கும் இடம்பெயர்ந்து வரும் மக்கள்!!

Read Time:2 Minute, 27 Second

வன்னியிலிருந்து ஏற்கனவே 192,000ற்கும் அதிகமானவர்கள் இடம்பெயர்ந்திருக்கும் நிலையில், மேலதிகமாகப் பலர் இடம்பெயர்ந்து வந்தால் முகாம்களில் இடநெருக்கடி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிதாக இடம்பெயர்ந்துவரும் மக்கள் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும், இவர்களுக்கான உணவுப் பொருள்கள் மற்றும் நிவாரணப் பொருள்களை சேகரித்து வழங்கவேண்டிய உடனடித்தேவை ஏற்பட்டிருப்பதாகவும் அரசசார்பற்ற நிறுவனப் பணியாளர் ஒருவர் தெரிவித்தார். ஏற்கனவே இடம்பெயர்ந்த மக்களுக்குப் போதியளவு நிவாரணப் பொருள்கள் சென்றடைவதில்லையெனப் பரவலாகக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படும் நிலையில் புதிதாக இடம்பெயர்ந்த மக்களின் தேவைகளையும் சேர்த்துக் கவனிப்பது அரசாங்கத்துக்கும், மனிதநேய அமைப்புக்களுக்கும் பாரிய சவாலாக அமைந்துள்ளது. பாதுகாப்பு வலயத்துக்குள் 50,000ற்கும் அதிகமானவர்கள் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை எதிர்வு கூறியிருந்த அதேநேரம், அங்கு ஒரு இலட்சத்துக்கும் அதிகமான பொதுமக்கள் இருப்பதாக அரசசார்பற்ற நிறுவனங்கள் கூறியிருந்தன. புதிதாக இடம்பெயர்ந்துவரும் மக்கள் முன்னர் வெளியேறியவர்களை விட மிகவும் மோசமான பாதிப்புக்கு உள்ளாகியிருப்பார்கள் என்பதால் அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்குப் பெருமளவான உதவிகள் தேவையென முன்னரே தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் கோரிக்கை விடுத்திருந்தன. இவ்வாறானதொரு நிலையில் பாதுகாப்பு வலயத்திலிருந்து பலர் இடம்பெயர்ந்திருப்பதுடன், எதிர்வரும் சில நாட்களில் மேலும் பலர் இடம்பெயர்வதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாதுகாப்பு வளையப் பகுதியில் கடும் போர் – பெரும் உயிரிழப்பு அபாயம்!
Next post “அதிரடி” இணையத்தின் வேண்டுகோள்!!!