பாதுகாப்பு வலயத்திலிருந்து மேலும் பலர் இடம்பெயர்வு

Read Time:2 Minute, 8 Second

பாதுகாப்பு வலயத்திலிருந்து புதிதாக 3,300 பேர் இடம்பெயர்ந்திருப்பதாகப் பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர். இவர்கள் பாதுகாப்பு வலயமான வெள்ளா முள்ளிக்குளம் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்தவர்கள் எனப் பாதுகாப்பு அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. பாதுகாப்பு வலயத்திலுள்ள மக்களை மீட்கும் இறுதிக்கட்ட நடவடிக்கைகளில் இராணுவத்தினர் ஈடுபட்டிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. பாதுகாப்பு வலையம் 1.5 கிலோ மீற்றராகக் குறைந்திருப்பதாகத் தெரிவித்திருக்கும் பாதுகாப்பு அமைச்சு, அனைத்துப் பகுதியையும் மீட்டு மக்களை வெளியேற்றும் நடவடிக்கையில் 58வது படையணி ஈடுபட்டிருப்பதாகத் தகவல் வெளியிட்டுள்ளது. பாதுகாப்பு வலயத்தை நோக்கி முன்னேறிவரும் 58வது படையணியும், கரையோரமாகவிருந்து முன்னேறிவரும் 59வது படையணியும் இணைக்கப்படும் எனப் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு வலயத்தின் கரயாமுள்ளிக்குளம்பகுதியில் விடுதலைப் புலிகளால் தடுத்துவைக்கப்பட்டிருந்த பர்ஹா-3 உணவுக் கப்பலையும் இராணுவத்தினர் மீட்டிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அதேநேரம், புதிதாக இடம்பெயர்ந்த மக்கள் 9 பேரூந்துகளில் மனிக்பாம் முகாமுக்கு அழைத்துச்செல்லப்பட்டதைக் கண்டதாக வவுனியாப் பிரதேச வாசியொருவர் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

3 thoughts on “பாதுகாப்பு வலயத்திலிருந்து மேலும் பலர் இடம்பெயர்வு

  1. ஓடி ஓடி திரிவதே தமிழரின் வாழ்க்கை ஆகி விட்டது…. என்று முடியுமோ இந்த ஓட்டம்?
    அவர்களை வாழ விடுங்கள்…..

  2. இரண்டு கேணல்களும் 6 பிராந்திய தளபதிகளும் அரசபடைகளால் பிடிக்கப்பட்டதோடு புலிகளின் கப்பல்களின் உரிமையாளர், பாடகர் சாந்தன் உட்பட பலர் இராணுவத்திடம் பிடிபட்டதாகவும் பிரபாகரனின் கதையை ராஜபக்சே ஜோடானில் இருந்து திரும்பியவுடன் மக்களுக்கு அறிவிக்க இருப்பதாகவும் இங்குள்ள இராணுவத்தினர் தெரிவிக்கின்றனர்.
    தம்பையா சபாரட்ணம்
    நாலாம் கட்டை
    அளம்பில் முல்லைத்தீவு

  3. நேற்று மதிவதனி பாலச்சந்திரன் உட்பட முக்கிய புலிகளின் குடும்பத்தவர் போலி அடையாள அட்டைகளுடன் இராணுவத்திடம் சரண் அடைந்து விட்டபோதும் இன்று இராணுவத்தினர் அவர்களை அடையாளம் கண்டு விட்டனர். ஞாயிறு காலை ராஜபக்சே பிரபாகரன் பிணமான செய்தியை தெரிவிக்க இருப்பதாக இங்கே சொல்லப்படுகிறது.
    இந்திய தீர்வை இருபது வருடத்திற்கு முன்னர் ஏற்றிருந்தால் முப்பதாயிரம் புலிகள் மாவீரர்கள் என்று மாய்ந்திருக்க வேண்டியதில்லை. கிளிநொச்சி பிடிபட்டதோடு யுத்த நிறுத்தம் அறிவித்திருந்தால் வன்னி மக்கள் இவ்வளவு இழப்புகளையும் அவலங்களையும் சந்ததித்திருக்க வேண்டி வந்திருக்காது.
    அரசியல் சூனியங்களை அறிவு கெட்ட முழு முட்டாள்களை புளுகு புளுகு என்று புளுகி இந்தா பண்ணப் போகிறான் படைக்கப் போகிறான் என்று பிலிம் காட்டி கடைசியில் கண்டது என்ன
    பங்கருக்குள் பாவாடையோடு படுத்துகிடந்த பேடி பிணமானதும் இன்னமும் புலி வாலுகள் அகபட்டதை சுருட்டி கொண்ட பின்னர் அரசாங்கம் அறிவித்த பின் தாமும் பிரபா பிணமானதை அறிவிக்க உள்ளார்கள்.
    இனியாவது அரசியல் பிழைப்பு நடத்தும் நரியர்களை நம்பாது ஒன்றுபட்டு முன்னேறுவோம்.

Leave a Reply

Previous post Thousands of Civilians Flee Amidst the LTTE Firing VIDEO
Next post பாதுகாப்பு வளையப் பகுதியில் கடும் போர் – பெரும் உயிரிழப்பு அபாயம்!