இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைகளுக்குப் பிரித்தானியா ஆதரவு
அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்படுகின்றமை தொடர்பாக இலங்கை அரசாங்கம் போர்க்குற்ற விசாரணைக்கு முகம்கொடுக்கவேண்டி ஏற்படுமெனப் பிரித்தானியா தெரிவித்துள்ளது. இலங்கையில் 6,500 பேர் கொல்லப்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளமை பெரும் அதிர்ச்சியை அளிப்பதாக பிரித்தானிய நாடாளுமன்ற விவாதத்தில் உரையாற்றிய பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அலுவலகத்திற்கான உட்துறை அமைச்சர் பில் ரம்பெல் கூறினார். விடுதலைப் புலிகளுக்கு எதிரான மோதல்களில் ஈடுபட்டிருக்கும் இலங்கை அரசாங்கப் படைகள் நடத்தும் ஷெல் தாக்குதல்கள் தொடர்பாக உடனடியாக நடத்தப்படும் விசாரணைகளுக்குப் பிரித்தானியா ஆதரவு வழங்கும் என அவர் தெரிவித்தார். இலங்கையில் நடக்கும் படுகொலைகள் நிறுத்தப்பட வேண்டும் என்ற செய்தியையே பிரித்தானிய அரசாங்கத்தின் சார்பில் விடுக்கப்படுவதாக ரம்பெல் கூறினார்.
“பொதுமக்கள் இருக்கும் பகுதிகள் மீது கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தித் தாக்குதல்கள் நடத்தப்படுவதால் பெருமளவான இழப்புக்களுக்கு மக்கள் முகம்கொடுத்துள்ளனர். பொதுமக்களுக்கு ஏற்படும்; இழப்புக்களைக் குறைப்பதற்கு இணங்கப்பட்ட சர்வதேசச் சட்டங்கள் மதிக்கப்படவில்லை” என்றார் அவர்.
“பொதுமக்களுக்குப் பெரும்; இழப்பை ஏற்படுத்திய மருத்துவமனைகள் மீதான ஷெல் தாக்குதல்கள் உள்ளடங்கலாக போர்க்குற்றம் என்பதை நிரூபிக்கக் கூடிய எந்தச் சம்பவங்கள் தொடர்பாகவும் உடனடி விசாரணைகள் நடத்த நாங்கள் ஒத்துழைப்பு வழங்குவோம்” என ரம்பெல் கூறினார்.
ஜனநாயகக் கட்சியின் வெளிவிவகாரப் பேச்சாளர் எட்வேர்ட் டேவியின் கேள்விக்குப் பதிலளித்த ரம்பெல், எந்தவொரு போர்க்குற்ற விசாரணைகளுக்கும் பிரித்தானிய அரசாங்கம் ஆதரவளிக்கும் என்பதை இலங்கைக்குத் தெளிவாகக் கூறிவிட்டது என்றார்.
அதேநேரம், இலங்கை விடயத்தில் சர்வதேச நாடுகள் கவனம்; செலுத்தி, இலங்;கை அரசாங்கத்தை விசாரணைக்கு உட்படுத்துவதற்கான அழுத்தத்தைக் கொடுக்கவேண்டுமென தொழிற்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், மனித உரிமைகளுக்கான நாடாளுமன்றக் குழுத் தலைவருமான அன்ரூ டிஸ்மோர் தெரிவித்தார்.
“இரண்டு தரப்பும் சர்வதேச மனிதநேயச் சட்டங்களை மதித்து நடக்கவேண்டும் எனவே வலியுறுத்துகிறோம். பொதுமக்களுக்கு இழப்புக்கள் ஏற்படுவதைக் குறைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அவர்கள் எடுக்கவேண்டும்” என்றார் அவர்.
இதேவேளை, கடந்த செவ்வாய்க்கிழமை அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டனைச் சந்தித்திருந்த பிரித்தானிய வெளிவிவகாரச் செயலாளர் டேவிட் மிலிபான்ட் இலங்கையில் மோதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமெனக் கோரிக்கை விடுத்திருந்தார்.
One thought on “இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைகளுக்குப் பிரித்தானியா ஆதரவு”
Leave a Reply
You must be logged in to post a comment.
முதலில பிரித்தானியாவுக்கு எதிராக போர் குற்ற விசாரணை செய்ய வேண்டும்..
இராக்கில் அவர்கள் செய்த கொலைகளுக்கு…
தமிழர் கொல்லப்படுவதுக்கு சிங்களவன் காரணம் அல்ல… தமிழனே… இவர்களின் கருத்தை பார்த்தால்… புலிகள் பாவம் விரல் சூப்பி கொண்டு இருக்கினம்… ராணுவம் இன அழிப்பு செய்யுது…
சின்ன விஷயம்..ஏன் இந்த மர மண்டையலுக்கு விளங்குது இல்லை?