உரிமைகுரல் எழுச்சிப் பேரணி தொடர்பாக… புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கு
எதிர்வரும் திங்கள்கிழமை பல ஐரோப்பிய நாடுகளிலும் கனடா அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் படுகொலை புலிகளால் உரிமைகுரல் எழுச்சி பேரணி நிகழ்வுகளை நடத்தவுள்ளார்கள். இதில் பலகோரிக்கைகளை முன்வைக்கிறார்கள். இதற்கு முன்பும் பலபேரணிகளை நடத்தியுள்ளார்கள்;.அமைதிபேரணி சமாதானபேரணி பொங்குதமிழ் எழுச்சிபேரணி எழுகதமிழ் எழுச்சிபேரணி என பலபேரணிகளை நடத்தி பலகோரிக்கைகளை ஐக்கிய நாடுகள் சபைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் சமர்பித்தார்கள். இவர்கள் சமர்பித்த கோரிக்கைகளை எப்பொழுதாவது சர்வதேச சமூகம் ஏற்றுக்கொண்டதா? இவர்கள் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இவர்கள்(புலிகள்) செய்யும் படுகொலைகள்இ அநியாயங்கள் அட்டூழியங்கள் போன்ற பயங்கரவாத செயல்கள் பற்றி சர்வதேசத்துக்கு தெரியாது என நினைக்கிறார்களா? பிரபாகரன் போன்ற கிணற்று தவளைகளுக்கு இவைபற்றி தெரியாமல் இருக்கலாம். ஆனால் சர்வதேச சமூகம் ஓன்றும் கிணற்று தவளைகளல்ல என்பதை முதலில் புலிகள் புரிந்து கொள்ள வேண்டும்.
திங்கள்கிழமை நடக்கவிருக்கும் உரிமைகுரல் எழுச்சி பேரணியில் முதலாவது கோரிக்கையாக தங்கள் மீதான தடையை நீக்க வேண்டுமாம். சரி இவர்கள் மீதுதடையை ஏன்கொண்டு வந்தார்கள் என்றுகொஞ்சம் யோசிக்க வேண்டாமோ? இவர்கள் செய்யும் பயங்கரவாத நடவடிக்கைகள் தான் காரணம் என்பது உலகறிந்த உண்மை. தடையை நீக்குவதானால் இவர்கள் செய்யும் பயங்கரவாத நடவடிக்கைகளை நிறுத்துவார்களா?
இரண்டாவது கோரிக்கையாக தமிழ்மக்களின் ஏகபிரதிநிதிகள் விடுதலை புலிகளே என்பதை வலியுறுத்த போயினமாம். இவர்கள் தமிர்களின் ஏகபிரதிநிதிகள் என்றால் இவர்கள் செய்யும் படுகொலைகள் கப்பம் வாங்குதல் ஆட்கடத்தல் பள்ளிகூடத்து பிள்களை கடத்தி படையில் சேர்த்தல் போன்ற பலபயங்கரவாத செயல்களுக்கும் ஒட்டுமொத்த ஈழத்தமிழனும்; பொறுப்பேற்க வேண்டுமா? உண்மையான தமிழன் இச்செயல்களை ஏற்றுக் கொள்ள மாட்டான். மடைமைகள்தான் இவர்களை ஏகபிரதிநதியாக ஏற்றுக் கொள்வான்.
மூன்றாவது கோரிக்கையாக தமிழ்மக்கள் படுகொலை செய்யபடுவது நிறுத்தபட வேண்டுமாம். சரி நியாயமான கோரிக்கை தான் முழுத்தமிழனும் ஏற்று கொள்ளுவான். யார் இந்தகொலைகளை செய்கிறார்கள்? புலிகளால் நாளாந்தம் தமிழர்கள் (வர்தகர்கள் ஆசிரியர்கள் ஜனநாயகவிரும்பிகள் மாற்றுக் கருத்துடையோர்) என பலசமூகத்தினர் கொல்லபடுகிறார்கள். இவாகள் செய்யும் கொலைகளை எப்பொழுது நிறுத்துவார்கள்? கள்ளர்களே களஞ்சியத்துக்கு காவலுக்கு நிற்கவேண்டும் என்று கேட்பது போன்றுதான் இவர்களின் கோரிக்கைகள்.
நான்காவதுகோரிக்கையாக இலங்கை ராணுவத்தை தமிழர் தாயகபகுதிகளில் இருந்து வெளியேற வேண்டுமாம். உண்மையில் தமிழர்கள் புலிகளோடு இருப்பதைவிட இலங்கை இராணுவத்துடனும் சிங்களவனுடனும் தான் இருக்க விரும்புகிறான். புலிகள் ஆயுதத்தை வைத்து கொண்டு அடக்குமுறையில்தான் தமிழர்களை வைத்து கொண்ருக்கிறார்கள். ஆகவே புலிகள் தமிழின ஆக்கிரமிப்பில் இருந்து தமிழனை விடுதலை செய்வார்களா? அப்படி செய்தால் இலங்கை இராணுவமும் தமிழர் பிரதேசத்தை விட்டுவெளியேறும்.
ஐந்தாவது கோரிக்கையாக தமிழ் மக்களின் தாயகம் தேசியம் சுயநிர்ணய உரிமை என்பன அங்கீகரிக்கப்டவேண்டுமாம். நியாயமான உரிமைகள்தான் இவ்வுரிமைகளை கோரிக்கைகளாக வைப்பவர்கள் (புலிகள்) தமிழர்களுக்கு என்ன உரிமையை கொடுத்துள்ளார்கள்? புலிகளிடம் போக்குவரத்து உரிமை கல்விகற்கும் உரிமை தொழில்செய்யும் உரிமை சொத்துரிமை என எந்தஓர் உரிமையும் தமிழனுக்கு இல்லை. தனிமனித உரிமை என்றுசொல்லபடுகிற பேச்சுரிமை கூட புலிகளிடம் கிடைக்கவில்லை எனும்பொழுது எவ்வாறு சர்வதேச சமூகம் இவர்கள் கேக்கும் கோரிக்கைகளை ஏற்றுகொள்வார்கள்.
விடுதலைபுலிகளை பொறுத்தவரை வெளிநாடுகளில் தங்களுக்கு எதாவது பிரச்சினை என்று வந்தால் அல்லது காசுசேர்பப்பதற்கு மட்டும்தான் புலம் பெயர்ந்த மக்கள் வேண்டும். மற்றும்படி புலிகளுக்கு காசுகொடுப்பவர்களும் கொடிபிடிப்பவர்களும் அவைகளுக்கு அடிமை போண்றவர்கள். வெளிநாட்டில் இருப்பவர்கள் தான் காசுகொடுத்து வளர்த்து விட்டவர்கள் புலிகளை. வளர்த்துவிட்டவர்கள் புலிகளிடம் எதாவது கோரிக்கை வைத்தால் அவர்கள் ஏற்றுகொள்வார்களா? கோரிக்கை வைப்பவர்களுக்கு தலையில் வெடிதான் வைப்பார்கள். இதுதான் உண்மையாகும்.
அன்பான தமிழர்களே இந்தபேரணியில் கலந்துகொள்வதன் மூலம் புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு துணைபோவதை தவிர வேறுஒன்றையும் நீங்கள் சாதிக்கபோவதில்லை. ஆகவே இந்தபேரணியில் கலந்துகொள்வதை தவிர்த்துக் கொள்ளுங்களென அன்போடு கேட்டுக் கொள்கிறேன். தர்மத்தின் வாழ்வுதனை சூதுகௌவ்வும் தர்மம் மறுபடியும் வெல்லும்;
நன்றி. கி. பாஸ்கரன் (அதிரடி வாசகன்) சுவிஸ்.
Thanks….. WWW.ATHIRADY.COM