ஜ.நா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படும் யோசனைகளை தீர்;மானங்களை ஏற்கப் போவதில்லை இலங்கை அரசு அறிவிப்பு

Read Time:2 Minute, 35 Second

இலங்கை நிலைவரம் தொடர்பாக ஜ.நா மனித உரிமைகள் பேரவையில் விசேட அமர்வுகள் நடைபெற்று யோசனைகள் அல்லது தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டால் அதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என இலங்கை அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்திருக்கிறது இது குறித்து மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கும் தெளிவாக எடுத்துக் கூறியிருப்பதாகவும் அரசங்கம் சுட்டிக்காட்டுகிறது ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இடர் முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க இந்த தகவலை வெளியிட்டார். அவர் அங்கு மேலும் பேசுகையில் ஜெனீவாவிலுள்ள மனித உரிமைகள் பேரவையில் இலங்கை நிலவரம் தொடர்பாக விஷேட அமர்வொன்றை நடத்த சில உறுப்பு நாடுகள் செயற்பட்டு வருகின்றன பேரவையில் விஷேட அமர்வொன்றை நடத்துவதென்றால் 48 உறுப்பு நாடுகளில் குறைந்தபட்சம் 16 நாடுகளது இணக்கம் தேவை அதாவது மூன்றிலொரு பங்கு சம்மதம் அவசியம் இதற்கமைய இரண்டு வாரங்களுக்கு முன்னரே 16 உறுப்பு நாடுகளிடமிருந்து விஷேட அமர்வுக்கு ஆதரவு கோரி கையொப்பம் திரட்டும் நடவடிக்கைகள் அரம்பமாகி விட்டன. ஜரோப்பிய நாடுகள் சிலவே இவ்வாறு செயற்படுகின்றன. 16 உறுப்பு நாடுகளின் கையொப்பங்களுடன் கூடிய மனுவை சமர்பிற்பதற்கான காலஎல்லை இன்றுடன் முடிவடைகிறது ஆனால் இன்னமும் 16 உறுப்பு நாடுகளின் கையப்பங்களை அங்கு பெறமுடியாமல் உள்ளது எனினும் இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தங்களை பிரயோகிப்பதானது விடுதலைப்புலிகளின் மெம்மேலும் அவர்களது செயல்களைத் தொடர இடமளிப்பதாகவே இருக்குமென நாம் எமது நட்பு நாடுகளுக்கு எடுத்துக் கூறியிருக்கிறோம். என்றார் அவர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்தியப் பொதுத்தேர்தல்கள் நிறைவடைந்ததும் இலங்கைத் தமிழர்கள் சம்பந்தமாக இந்திய அரசியல்வாதிகள் தற்சமயம் காண்பித்துவரும் அக்கறை முடிவுக்கு வந்துவிடும் -அமைச்சர் இளங்கோவன்
Next post பத்திரிகையாளர் வெளியேற்றம் பிரிட்டன் அரசு கடும் கண்டனம்