இந்தியப் பொதுத்தேர்தல்கள் நிறைவடைந்ததும் இலங்கைத் தமிழர்கள் சம்பந்தமாக இந்திய அரசியல்வாதிகள் தற்சமயம் காண்பித்துவரும் அக்கறை முடிவுக்கு வந்துவிடும் -அமைச்சர் இளங்கோவன்

Read Time:1 Minute, 42 Second

இந்தியப் பொதுத்தேர்தல்கள் நிறைவடைந்ததும் இலங்கைத் தமிழர்கள் சம்பந்தமாக இந்திய அரசியல்வாதிகள் தற்சமயம் காண்பித்துவரும் அக்கறை முடிவுக்கு வந்துவிடுமென்று இந்திய அமைச்சர். இ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். இந்திய லோக்சபா தேர்தல்களில் தமிழ்நாட்டு மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காகவே இலங்கைத் தமிழர்கள்மீது பெருமளவு அக்கறையை சில தமிழ்நாடு அரசியல்வாதிகள் காண்பித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கையிலுள்ள தமிழ்மக்களைக் காப்பாற்றுவதற்கு இந்திய இராணுவம் அனுப்பப்படுமென்றும் சில அரசியல்வாதிகள் அறிவித்துள்ளனர். இத்தகைய நடவடிக்கைகளினால் இலங்கையிலுள்ள பல்லின மக்கள் மத்தியில் அமைதியையும் நல்லிணக்கப்பாட்டையும் ஏற்படுத்த முடியாதென்றும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை தமிழக கடற்கரைப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. புலிகளின் ஊடுருவலைத் தடுக்கவே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இந்திய மீனவர்களுக்கு புதிய அடையாள அட்டை வழங்கத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளினால் (ரிஎம்விபி) பலவந்தமாக இணைத்துக் கொள்ளப்பட்ட சிறுவர் போராளிகள் மீட்பு -திவயின தகவல்
Next post ஜ.நா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படும் யோசனைகளை தீர்;மானங்களை ஏற்கப் போவதில்லை இலங்கை அரசு அறிவிப்பு