லண்டனில்; போராட்டம் நடத்தும் தமிழர்களால் பிரிடிஷ் நாடாளுமன்ற சதுக்கம் முற்றுகை.. சபாநாயகர் அதிருப்தி

Read Time:2 Minute, 32 Second

பிரிட்டனில் வாழும் இலங்கைத் தமிழர்களும் அவர்களுக்கு ஆதரவானவர்களும் லண்டனில் மேற்கொண்டு வரும் ஆர்ப்பாட்டம,; பேரணிகளுக்கு பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் கண்டனக்குரல்கள் வெளியாகியுள்ளன. போராட்டக்காரர்கள் தமது நடவடிக்கைகள் மூலம் நாடாளுமன்ற சதுக்கத்தை கைப்பற்றி தம் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக. நாடாளுமன்றத்தின் மக்கள் அவையின் சபாநாயகர் மைக்கேல் மார்ட்டின் குற்றம் சாட்டியிருக்கிறார். இவர்களின் இந்த நடவடிக்கைக்கள் மற்ற நியாயமான ஜனநாயக ரீதியிலான போராட்டக்காரர்களின் உரிமைகளைப் பறிப்பதாக இருப்பதாகவும் அவர் கூறினார். இந்த போராட்டக்காரர்கள் காரணமாக தமது செயற்பாடுகள் பாதிக்கப்படுவதாக பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் தம்மிடம் புகார் தெரிவித்திருப்பதாகவும் அவர் கூறினார். இந்த போராட்டக்காரர்களுக்கு 50 பேர் வரை குழுமலாம் என்று அனுமதி அளித்தால் 50 பேர் வரை தான் குழும வேண்டும் என்று கண்டிப்பு தெரிவித்த மார்டின் அவர்கள். அதற்கு பதிலாக நாடாளுமன்ற சதுக்கத்தில் கூடாரங்கள் அமைத்துக் கொள்வது. உணவு கொண்டு வருது என்பதெல்லாம் போராட்டத்திற்கான அனுமதிகளாக ஆகாது என்றும் கண்டித்தார். நாடாளுமன்ற சதுக்கத்தை போராட்டக்காரர்கள் கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதும், தலைநகரின் மையப்பகுதியை செயலிழக்கச் செய்யும் இவர்களின் இந்த செயல்களும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று குற்றம் சாட்டிய எதிர்கட்சியைச் சேர்ந்த நிழல் பாதுகாப்பு அமைச்சர் ஜெரால்ட் ஹோவர்த்,லண்டன் மாநகர காவல்துறையின் ஆணையர் என்ன செய்கிறார் என்றும் கேள்வி எழுப்பினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

One thought on “லண்டனில்; போராட்டம் நடத்தும் தமிழர்களால் பிரிடிஷ் நாடாளுமன்ற சதுக்கம் முற்றுகை.. சபாநாயகர் அதிருப்தி

  1. எதுவுமே தெரியாமல் இன்று குழம்பிப் போயிருக்கும் புலிகளுக்கு வேறு வழியில்லை.ஒள்றைப் பத்தாக்கி மக்களின் உணர்வுகளோடு பந்தாடும் நிலைக்கு விடுதலைப் புலிகளின் முட்டாள்த் தலைமை தள்ளப்பட்டிருக்கிறது. விட்ட தவறுகளை மறுப்போரும், செய்த குற்ரங்களை ஏற்காதவரும் தலைவராகவோ, அல்லது வழிகாட்டியாகவோ ஒருபோதும் இருக்கமுடியாது. இன்றைய சூழலில் இலங்கையில் சமாதானமும், தமிழ் சிஙகள, முஸ்லிம் இனங்களிற்கிடையே ஒற்றுமையுமே முக்கியமானது. புலத்தில் வாழும் தமிழர் சிங்களவர் தமிழரிற்கு பகைவர்கள் என்பதனை மட்டுமே தளமாகவைத்து நடத்தும் போராட்டங்கள் ஈழ்த்தமிழர் நிலைமையை மேலும் மோசமடையச் செயுமே தவிர ஒருவ்கையான தீர்வையும் தரப்போவதில்லை. சிங்கப்பூரை உருவாக்கிய லீ குவான்யூ, இலங்கையை பார்த்த பின் இலங்கை போல் சிங்கப்பூரை உருவாக்க வேண்டும் என எண்ணம் கொண்டு சிங்கப்பூரை உருவாக்கினார். பின்னர் அதே லீ குவான்யூவால் இலங்கை போல் என் நாடு ஆகக் கூடாது என்றும் சொன்னார். முன்னது பெருமை. பின்னது வெட்கம். இனி ஒரு போதும் அழிவுகள் இலங்கை மண்ணில் இல்லாமல் போக வேண்டுமானால் , மிகுதி தமிழரும் சுபீட்சமாக வாழ வேண்டுமானால் அனைத்து மக்களும் இலங்கை முழுவதும் பரவி வாழும் நிலைமை உருவாக வேண்டும். இது ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளவும், மொழி அறிவை பகிர்ந்து கொள்ளவும் ,அப் பகுதியின் வளர்ச்சிக்கான நிதி பங்கீடுகளை சம அளவாக பெறவும் உதவும். ஒரு பகுதியின் முன்னேற்றமே அம் மக்களின் வாழ்வை வளமாக்கும். தமிழரோடு சிங்களவரும் கலப்பதால் அங்கு முன்னேற்ற வழிவகைகளுக்கான நிதி பங்கீடுகள் சிங்கள பகுதிகளுக்கு போல் கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம். மொழி வாழ வேண்டுமானால், அந்த மொழி பேசும் மனிதன் வாழ வேண்டும். அந்த மனிதன் வாழ வேண்டுமானால் அந்த மனிதன் உயிரோடு இருக்க வேண்டும். அதைவிடுத்து இன்னொரு இன அழிப்புக்கான எண்ணங்கள் இனி எவர் மனதிலும் உருவாக்கப்படக் கூடாது. புலிகளுக்கு இப்படியான கருத்துகள் பாவற்காய் போலவே இருக்கும். எம் மக்களை இந்த நிலைக்கு தள்ளியவர்கள் அவர்களே. எனவே எமக்கு என்றும் மக்களே முக்கியம்.
    இன்று தமிழ் மக்களில் பெரும் பாலானோர் தன் தாயக பகுதியில் இருந்து வெளியேதான் இருக்கிறார்கள். அநேகமான தமிழர்கள் இன்று, சிங்கள பகுதிகளிலும் , தமிழ் நாட்டிலும் , வெளிநாடுகளிலுமே வாழ்கிறார்கள். மக்களே இல்லாத மண் குறித்து பேசுவதும் அதை மீட்பது குறித்து போராட எண்ணுவதும் கானல் நீர் கதைதான் இனி….
    பொதுவாக பார்த்தால் , தமிழ் பகுதிகளை விட்டு வெளியேறி வாழும் தமிழர்களுக்கு இணையாக சிங்களவர்களோ அல்லது முஸ்லீம்களோ தமிழ் பகுதிகளில் இல்லை.
    சிங்களவர்கள் இவற்றை தமிழர் நினைக்கும் அளவுக்கு பெரிதுபடுத்தியதாகத் தெரியவில்லை. அப்படி ஒரு நிலை இருந்தால் தமிழர்கள் சிங்கள பகுதிகளை விட்டு எப்போதோ இல்லாமல் போயிருக்க வேண்டும்.இந்திய தமிழ் நாட்டு அரசியல் உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு ஆதாயம் தேடும் ஒரு அரசியல். அது நம் தமிழ் அரசியல் வாதிகள் தொட்டு போராளிகள் வரை தொடர்ந்து வந்து கொண்டே இருந்திருக்கிறது.இருக்கிறது. இதுவும் ஒரு அவலம்தான். இதன் பிரதிபலிப்புதான், உலக நாட்டுத் தலைவர்களிடம், நம்மவர்கள் உணர்ச்சி மேலீட்டால் உருவாக்கும் அனுதாபங்களைக் கூட,சிங்கள அரசியல்வாதிகளால் லொஜிக்காக தகர்க்க முடிந்திருப்பதற்கான காரணம். சிங்கள தலைமைகள் ஐயோ அடிக்கிறான் என்று கத்தியதும் இல்லை. அடிச்சுப் பிடிச்சிட்டோம் என்று குதித்ததுமில்லை. அவர்கள் நிதானமாக தமது சிந்தனைகளை நகர்த்திக் கொண்டேயிருக்கிறார்கள். எனவே இலங்கை பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வுக்கு வழி ,அனைத்து மக்களும் எங்கும் தனி ஒரு குழுவாக வாழாமல், நாடு முழுவதும் பரந்து வாழ்வதும் , இரு மொழிக் கல்வியை (தமிழ் – சிங்களம்) கட்டாயமாகக் கற்று புரிந்துணர்வோடு வாழ்வதுமேயாகும். மொழி, மனிதனை புரிந்து கொள்வதற்கான வழி. உலகமெல்லாம் பரவி விட்ட தமிழர்கள் , தாம் வந்த நாட்டு மொழியை கற்றுக் கொள்ள முடியுமானால், தான் வாழும் நாட்டின் சகோதர மொழியைக் கற்க முடியாது என்பது பிடிவாதமாக மறுப்பதாகவே இருக்கிறது. அந்த சிந்தனையை உருவாக்கிய பெரும் தவறு நம் தமிழ் அரசியல்வாதிகள் சார்ந்தது. அந்நிலை மாற வேண்டும். உன்னால் ஒரு மனிதனை புரிந்து கொள்ள முடியுமானால், அவனோடு இணைந்து வாழ்வது ஒன்றும் சாதனையல்ல. அது சரித்திரம். அதற்காக அவன் மொழி நமக்கு தெரிய வேண்டும். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் மொழி அறிவும் , கலந்து நட்போடு வாழும் மன நிலையும் , அந்த இணைப்பினால் அனைவருக்கும் கிடைக்கும் வசதி வாய்ப்புகளும் ஒற்றுமையான புது வசந்தத்தை அனைத்து மக்களுக்கும் கிடைக்க வழி அமைக்கும்.

Leave a Reply

Previous post தமிழ் கட்சிகளைக் கொண்ட ஆலோசனைக் குழு முகாம்களுக்கு விஜயம்
Next post Wanni Operation Tamil VIDEO