கடற்புலிகளின் 2வது தலைவர் செலியன் மோதலில் மரணம்

Read Time:1 Minute, 21 Second

கடற்புலிகளின் இரண்டாவது தலைவரான செலியன் மோதலின் போது கொல்லப்பட்டிருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார நேற்றுத் தெரிவித்தார். முல்லைத்தீவு கரியமுள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த புலிகளின் இறுதி பாதுகாப்பு அரணையும் அழிக்கும் நோக்கில் முன்னேறிய படையினருக்கும் புலிகளுக்கு மிடையே கடந்த சனிக்கிழமை மாலை கடும் சமர் மூண்டது. இம்மோதலில் புலிகளுக்கு பாரிய சேதம் ஏற்பட்டது. பெரும் எண்ணிக்கையான புலி உறுப்பினர்களும் கொல்லப்பட்டனர். மோதல்களையடுத்து புலிகளின் தொலைத்தொடர்பு சம்பாஷணையை இடைமறித்து செவிமடுத்த போதே கொல்லப்பட்ட புலி உறுப்பினர்களுள் கடற்புலிகளின் இரண்டாவது தலைவரான செல்லியனும் உயிரிழந்திருப்பது ஊர்ஜிதம் செய்யப்பட்டதாகவும் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதியில் புலிகளின் 31 சடலங்கள் கண்டுபிடிப்பு.. முதல்தடவையாக பெருந்தொகையான ஆயுதமும் மீட்பு
Next post ஜப்பானில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி பணமோசடி