அக்கரைப்பற்றில் பொலிஸாரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் ஒருவர் பலி 11பேர் காயம்

Read Time:1 Minute, 55 Second

அக்கரைப்பற்று முஸ்லிம் தேசிய பாடசாலை மைதானத்தில் நேற்றிரவு இடம்பெற்ற வைபவமொன்றில் பாதுகாப்பு கடமையிலிருந்த பொலிஸாரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார் 4மாணவர்கள் உட்பட 11பேர் காயமடைந்துள்ளனர் உயிரிழந்தவர் அக்கரைப்பற்றைச் சேர்ந்த சுபைர் பக்கீஸ் வயது21 என அடையாளம் காணப்பட்டுள்ளார் 4பொலிஸார் 4மாணவர்கள் உட்பட காயமடைந்துள்ள 11பேர் அக்கரைப்பற்று வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர. நீர்கொழும்பு வடிகால் அமைப்பு அமைச்சர் ஏ.எல்.அதாவுல்லா நேற்றிரவு இப்பாடசாலையில் இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றினார். இரவு 10.15 மணியளவில் அமைச்சர் தனது உரையை முடித்துக் கொண்டு திரும்பிய பின்பு கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது பாதுகாப்பு கடமையிலிருந்த பொலிஸாரும் விஷேட அதிரடிப்படையினரும் கடமை முடிந்து அங்கிருந்து வெளியேறி சென்று கொண்டிருந் தபோது பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் தன்னியக்க துப்பாக்கி தவறுதலாக வெடித்ததாகவும் இதுதொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வரும் அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மட்டக்களப்பில் நான்கு இளைஞர்கள் காணவில்லை மேலும் ஒருவர் கடத்தப் பட்டுள்ளார்..
Next post புலிகளுடன் தொடர்புடையவர்கள் என இராணுவத்திடம் சரணடைந்த சிறுவர், சிறுமிகள், இளைஞர்கள் தங்கியுள்ள புனர்வாழ்வு நிலையங்களுக்கு புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ் (நாபா) தலைவர்கள் விஜயம்!! (புகைப்படங்கள் இணைக்கப் பட்டுள்ளது.)