புலிகளுடன் தொடர்புடையவர்கள் என இராணுவத்திடம் சரணடைந்த சிறுவர், சிறுமிகள், இளைஞர்கள் தங்கியுள்ள புனர்வாழ்வு நிலையங்களுக்கு புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ் (நாபா) தலைவர்கள் விஜயம்!! (புகைப்படங்கள் இணைக்கப் பட்டுள்ளது.)

Read Time:9 Minute, 19 Second

plote-vavuniyaa11 முல்லைத்தீவில் புலிகளின் பிடியிலிருந்து தப்பிவந்து இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள நலன்புரி நிலையங்களுக்கு அழைத்துவரப்பட்டவர்களில் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என இராணுவத்திடம் சரணடைந்த சிறுவர், சிறுமிகள், இளைஞர்கள் நலன்புரி நிலையங்களிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களுக்கு என்ன நடந்தது என தெரியவில்லை. கடந்த காலங்களை போன்று இவர்களும் காணாமற் போனவர்களின் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டியவர்கள் என புலிகள் பாரியளவில் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இவர்களை பற்றிய விபரங்களை அறியும் பணியில் புளொட் மற்றும் ஈபிஆர்எல்எவ் கட்சிகள் எடுத்த முயற்சிகளுக்கு பலன் கிடைத்துள்ளது. மேற்படி குழந்தை போராளிகளான சிறுவர், சிறுமிகள் மற்றும் இளைஞர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டதுடன் அவர்களுடன் கலந்துரையாடி அவர்களின் நிலைமையையும் அறிந்து கொண்டனர். இதற்கான ஏற்பாட்டினை நீதி அமைச்சின் செயலாளரும், புனர்வாழ்வு நடவடிக்கைகள் பணிப்பாளருமான சுசரித கம்லத் அவர்கள் செய்து கொடுத்திருந்தார். கம்பஹா மாவட்டத்தில் அம்பேபுச என்னுமிடத்தில் அமைக்கப்பட்டுள்ள புனர்வாழ்வு நிலையத்தில் 54 இளைஞர்களும், 41 யுவதிகளுமாக 95 பேர் தங்க வைக்கப் பட்டுள்ளனர். இவர்களில் வயது குறைந்த சிறுவர், சிறுமிகள் அதிகமுள்ளனர். இவர்களுக்கு தமிழ், ஆங்கில பாடங்கள் கற்பிக்கப்படுவதுடன் கணனிக்கல்வி மற்றும் தொழிற்கல்வி என்பவற்றையும் பயிற்றுவிப்பதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இவ்விஜயத்தின் போது பெண் பிள்ளைகளுக்கான புதிய உடுபிடவைகள், கைக்கடிகாரங்கள், அணிகலன்கள், அழகுசாதனப் பொருட்கள் என்பன வழங்கப்பட்டன. இந்த புனர்வாழ்வு நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள குழந்தை போராளிகள், இளைஞர், யுவதிகளின் ஆடல், பாடல் கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

கண்டி மாவட்டம் பள்ளேகல என்னுமிடத்தில் 800 இளைஞர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை பார்வையிட்டு அவர்களின் தேவைகளை கேட்டறிந்ததுடன், அவர்களுக்கு 20 ஆயிரம் ரூபா பெறுமதியான பிஸ்கட் வகைகளையும் கையளித்தனர்.

இவர்கள் மத்தியில் உரையாற்றிய நீதி அமைச்சின் செயலாளரும், புனர்வாழ்வு, நடவடிக்கைகளுக்கான பணிப்பாளருமான சுசரித கம்லத், உங்களது கடந்த காலத்தில் நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்பது உங்களுக்கும் தெரியும், எங்களுக்கும் தெரியும், ஆனால் அதனை மறந்து எதிர்காலத்தில் உங்களது நல்வாழ்விற்காகவும், இந்த நாட்டின் வளர்ச்சிக்காகவும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அவர்களுக்கு வழங்கப்படுகின்ற உணவு வகைகளை தருவித்து பார்வையிட்டதுடன், கட்சி தலைவர்கள் பிரதிநிதிகளும் அவற்றை பார்வையிட ஏற்பாடு செய்தார். இருமல் நோய் உள்ளவர்களுக்கு மருத்துவ உதவிகளை பெற்றுக்கொடுக்குமாறும், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு பிரத்தியேக உணவுகளை வழங்குமாறும் அந்த இடத்திலேயே பணிப்புரைகளை வழங்கியதுடன், பல்கலைக்கழக மாணவர்கள் கல்வியை தொடர்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் உறுதியளித்தார்.

இளைஞர் யுவதிகள் மத்தியில் உரையாற்றிய புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன். ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்து வைத்தவர்கள் என்ற வகையில் உங்களுடைய இன்றைய இந்த நிலைக்கு நாங்களும் ஒருவகையில் காரணமானவர்கள், என்றுதான் சொல்ல வேண்டும். முகாம்களிலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட உங்களது நிலைபற்றி தெரியாது உங்களது பெற்றோர் வேதனையோடு உள்ளனர். உண்மைநிலையை தெரிந்து கொள்வதற்காகவே இங்கு வந்திருக்கின்றோம். உங்களை இங்கு சந்தித்தது எமக்கு ஆறுதலை தருகின்றது. இந்த செய்தியை நாங்கள் உங்கள் பெற்றோருக்கு தெரிவிப்போம். பழையவற்றை மறந்து புதியதொரு வாழ்க்கையில் நீங்கள் காலடி பதிக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். அவ்வாறு கருதுகின்ற, உங்கள் கஸ்டங்களை புரிந்து கொண்டுள்ள அதிகாரியாக திரு. கம்லத் அவர்கள் இதற்கு நிச்சயம் துணைபுரிவார் என தெரிவித்தார்.

அடுத்து அவ் இளைஞர்கள் முன்னிலையில் பேசிய பத்மநாபா ஈபிஆர்எல்எவ் கட்சியின் பொதுச்செயலாளர் வன்முறை எமது சமூகத்தை நடுத்தெருவிற்கு கொண்டு வந்து விட்டிருக்கிறது. வன்முறை அற்ற அஹிம்சை வழியிலான செயற்பாடுகளே எதிர்காலத்தில் நிம்மதியான வாழ்வை ஏற்படுத்தி தரும். தவறுகள் இழைக்காதவர்கள் இருக்க முடியாது அவற்றை திருத்திக் கொண்டு மாற்றத்திற்குள்ளாவதும் அவசியம். நீங்கள் குடும்பங்களை பிரிந்திருக்கிறீர்கள், தொழிலை, கல்வியை இழந்திருக்கிறீர்கள் இந்நிலைமை தற்காலிகமானது. நீங்கள் உங்கள் குடும்பங்களுடன், உற்ற சுற்றத்துடன் சேரும் காலம் வர வேண்டும், விரைவில் வரும். நாங்களும் உங்கள் நல்வாழ்விற்காக எம்மாலான அனைத்தையும் செய்வோம். நீங்கள் கௌரவமான பிரஜைகளாக வாழ வழி செய்ய வேண்டும் என்ற அக்கறையுள்ள, மனித நேயம் மிக்க சுசரித கம்லத் அவர்கள் உங்கள் நலன்களை கவனிப்பதற்கான அதிகாரியாக வாய்த்துள்ளார் எனவும் குறிப்பிட்டர்.

புனர்வாழ்வு நிலையத்தில் உள்ள இளைஞர்களின் பிரதிநிதியாக மோகன் என்பவர் உரையாற்றினார். அழுத்தங்களுக்கு மத்தியில் விருப்பமில்லாத ஒரு செயலில் நாங்கள் ஈடுபட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டோம். ஜனாதிபதி அவர்களும், முன்னாள் இயக்க தலைவரான கருணா, புளொட் தலைவர் சித்தார்த்தன் ஆகியோர் வானொலி மூலமாக விடுத்த அறிவித்தலை கேட்டு நாம் சரணடைந்தோம். எனவே எமக்கு நல்லதொரு எதிர்காலத்தை ஏற்படுத்தி தாருங்கள் என அனைத்து இளைஞர்கள் சார்பிலும் கேட்டுக் கொண்டார். புலிகள் எங்களை கைவிட்டு விட்டார்கள் நாங்களும் அவர்களை கைவிட்டு இங்கு வந்திருக்கிறோம். நாங்கள் எங்கள் பிரதிநிதிகளாக தெரிவு செய்த கூட்டமைப்பினரும் எங்கள் துன்பங்களில் கைகொடுக்கவில்லை. நீங்களும் எங்களை கைவிட்டு விடாதீர்கள். எங்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்து தருமாறு ஜனாதிபதியிடம் தெரிவியுங்கள் என குறிப்பிட்டார். இந்த விஜயத்தின்போது புளொட் அமைப்பின் ஜேர்மன் ஜெகநாதன், ஈபிஆர்எல்எவ் யாழ். பிராந்திய செயலாளர் எஸ்.மோகன், வன்னி மாவட்ட செயலாளர் ஞானதாஸ் சிவம் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

ploteeprlf-08052010ploteeprlf-08052011ploteeprlf-08052009

plote-vavuniyacopy_of_c1plote-vavuniyap50800441plote-vavuniyap50800811plote-vavuniyacopy_of_p50800241plote-vavuniyacopy_of_p50800311plote-vavuniyaa111plote-vavuniyaa61plote-eprlfp50800941plote-eprlfp50801021plote-eprlfp50801131plote-eprlfp50801211plote-eprlfp50801071

Thanks.. WWW.ATHIRADY.COM

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

6 thoughts on “புலிகளுடன் தொடர்புடையவர்கள் என இராணுவத்திடம் சரணடைந்த சிறுவர், சிறுமிகள், இளைஞர்கள் தங்கியுள்ள புனர்வாழ்வு நிலையங்களுக்கு புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ் (நாபா) தலைவர்கள் விஜயம்!! (புகைப்படங்கள் இணைக்கப் பட்டுள்ளது.)

  1. A massive artillery barrage in a safe haven set up in Sri Lanka’s conflict zone killed at least 378 civilians overnight, according to a government doctor.

    The doctor, V. Shanmugarajah, called it the bloodiest attack he had witnessed in the fight against the Tamil Tigers and said that he feared many more had been killed as some bodies were being buried on the spot.

    The Tigers said in a statement on a pro-rebel website that 2,000 civilians had been killed in shelling by government forces in the past 24 hours.

    “We are doing what is possible,” Dr Shanmugarajah said, adding that 1,122 more people had been wounded. “The situation is overwhelming; nothing is within our control.”

  2. பிரபாகரன் ஒரு உலக மாவீரன் அவரை நினைத்து நாம் பெருமை பட வேண்டும் . தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் அவரை ஆதரிக்க வேண்டும் . அப்போது தான் தமிழ் ஈழம் மலரும் .இலங்கை ராணுவம் வீழ்வது உறுதி . தனி தமிழ் ஈழம் அமைவது உறுதி. அதை எந்த கொம்பனாலும் ஒன்னும் தடுக்க முடியாது. விரைவில் ராணுவத்திருக்கு பதில் அடி உண்டு.. சோனியா கருணாநிதி கூட்டு சதியீல் தமிழர்கள் இன்னும் தொடரும் கொலைக்கார கூட்டணியை தோல்வி அடைய செய்வதே தமிழர்களின் கடமையாக இருக்கும்

  3. விரைவில் ராணுவத்திருக்கு பதில் அடி உண்டு எண்டு சொல்லி சொல்லியே சுய இன்பம் கண்டு கொண்டு இருங்கோ…
    அது சரி இப்ப ஏன் புலிகள் அடிக்காம இருக்கினம்? ஒய்வு எடுக்கினமோ?

    புலிகள் வீழ்ந்து எழும்பிய வரலாறு உண்டு..உண்மைகள்.. ஆனால் எப்பவும் காலம் ஒரே மாதிரியாக இருக்காது….

    நீங்கள் வீழ்ந்து எழுவதுக்கு எத்தனை உயிர்கள் பலியாகின்றன … ஐயோ கடவுளே..

    பிரபகாரன் மாவீரன் மட்டுமல்ல.. மாவீரர் ஆகவும் வேண்டும்… அப்போ தான் தமிழருக்கு விடிவு.

  4. தன பிள்ளைகளை படிபித்து கொண்டு எம் பிள்ளைகளை மாவீரராக்கி வெளி நாட்டு புலன் பெயர்ந்த மக்குகளிடம் கோடி கோடி யாக பணம் சேர்த்து தன பிள்ளைகளை வெளி நாட்டுக்கு அனுப்பி தானும் நீச்சல் தடாகம் முதல் எல்லாம் கட்டி நல்லாக திண்டு குளித்து நீந்தி அனுபவித்து விட்டு இப்போ தனது பாதுகாப்புக்காக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மக்களை தானே இன்னொரு பக்கத்தில் இருந்து ஷெல் அனுப்பி கமெராவும் வீடியோவும் ரெடியாக படம் எடுத்து பொய் பிரச்சாரம் மூலம் தன்னை காப்பாத்த யாராவது வெளிநாட்டு அல்லது ஐ.நா.காரர் வந்தால் அவர் காலில் சரண் அடைந்து ராஜபக்சேவிடமிருந்து தப்பலாம் என்று பிரபாகரன் பிளான் பண்ணி இருக்கிறான்.
    ஒன்றும் சரிவராடி ரெட்குரோஸ் காரரை தாக்கி விட்டு பழியை அரசாங்கத்தில் போட்டு விட்டு பாக்க வருகிற ரெட்குரோஸ்காரிடம் சரண் அடைவது தான் கடைசி வழியாம்.

  5. சாம்…
    உங்களுக்கு என்ன திடீரென்று இப்படியாயிற்று…
    இந்தியத் தேர்தல் முடிந்தாலும் உங்களுக்கு ஒன்றும் ஆகாது. தமிழ்நாட்டில் யார் வென்றாலும் மத்திய அரசின் முடிவிலேயே எதுவும் நடக்கும். தமிழ்நாடு சுயமாக எதுவும் செய்ய இயலாது. அத்தோடு இனஒழிப்பு எனக் கூச்சல் போடும் புலம்பெயர் தமிழர்கள் கொஞ்சம் சிந்திக்கவும் தெரிய வேண்டும். அதாவது, வன்னியில் இராணுவத்தைத் தவிர யாருமேயில்லை. அவர்கள் நினைத்தால் ஒரு மணித்தியாலத்திலேயே அனைவரையும் குண்டுவீசி அழிக்க முடியும். ஆனாலும் அவர்கள் மெதுவாக முன்னேறுகிறார்கள் ஏனெனில் அப்பாவித் தமிழர்கள் காப்பாற்றப்படவேண்டும் என்பதாலேயே! இதையெல்லாம் யோசிக்கிற அளவுக்கு தமிழருக்கு மூளையில்லை.

    சாம்… என்னதான் இருந்தாலும் உங்களுக்கு மூளை நல்லா வேலைசெய்யுது…
    இவ்வளவு காலமும் செத்துப்போன புலியாட்களுக்கு பிரபா குடுத்த மாமனிதர், வீரவேங்கை, பற்றாளர் போன்ற பட்டங்களையெல்லாம் நீங்கள் வழங்கிய பட்டம் மிஞ்சிவிட்டது.

    பிரபா சாக முன்னரேயே உங்கள் கரிநாக்கால்…. மாவீரன்… பட்டம் கொடுத்துவிட்டீரே!

    தமிழீழம் கிடைத்தாலும் அது பிரபாகரன் செத்த பிறகுதான் என்பதை எவ்வளவு அழகாக எதிர்வு கூறியிருக்கிறீர். வாழ்த்துக்கள்… பிரபாவின் செத்தவீட்டில் தங்களை நேரில் சந்தித்துகொள்கிறேன்.

Leave a Reply

Previous post அக்கரைப்பற்றில் பொலிஸாரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் ஒருவர் பலி 11பேர் காயம்
Next post இலங்கைக்கான ஐ.நாஇன் தூதுவராக பில் கிளின்டன் அல்லது கொபி அனானை நியமிக்குமாறு கோரிக்கை