புலிகளின் கடைசிக் காவல் அரணையும்; கைப்பற்றி விட்டதாகப் படையினர் அறிவிப்பு

Read Time:1 Minute, 40 Second

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் அமைந்திருந்ததாகப் கருதப்படும் விடுதலைப் புலிகளின் கடைசிச் சுரங்க காவலரணும் கைப்பற்றப்பட்டது என இராணுவத்தரப்பு அறிவித்துள்ளது வெள்ளை முள்ளிவாய்காலுக்கு தெற்கே விடுதலைப்புலிகளால் அமைக்கப்பட்டிருந்த கடைசிச் சுரங்கக் காவலரண் படை;யினரால் கடும் சண்டையின் பின் நேற்று கைப்பற்றப்பட்டுள்ளது அந்தப் பகுதியில் நடந்த கடும் சண்டையில் பல படையினர் காயமடைந்துள்ளனர் என்றும் இராணுவத் தரப்பு கூறியுள்ளது 58ஆவது படையணிக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நேற்று முழு நாளும் இடைவிடாது நடைபெறும் கடும் சண்டையை தொடர்ந்து இந்தக் காவலரண் கைப்பற்றப்பட்டுள்ளது இன்னமும் 800மீற்றர் தூரத்தைப் படையினர் கைப்பற்றினால் விடுதலைப் புலிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொது மக்களை மீட்க முடியும் என்றும் படைத்தரப்பு தெரிவித்துள்ளது முள்ளிவாக்கால் சுரங்கக் காவலரண் கைப்பற்றப்பட்ட பின்னர் தேடுதல் நடத்திய படையினர் ஆயுத தளபாடங்களை மீட்டுள்ளனர் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

One thought on “புலிகளின் கடைசிக் காவல் அரணையும்; கைப்பற்றி விட்டதாகப் படையினர் அறிவிப்பு

  1. தராசை றெடியா வச்சிருக்கோ!

    தலைவர் முடிந்ததும் மக்கள் கொண்டு வந்து கொட்டுவாங்கள்.

    அப்ப நிலுவை புரியும்?

    நிறுக்கத்தான் முடியாமல் போகும்?

Leave a Reply

Previous post கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கிப்பிரயோகத்தில் ஒருவர் பலி எண்மர்காயம்
Next post வன்னியில் இராணுவத்தினர் மீது புலிகள் தற்கொலைத் தாக்குதல்..