ஆறு சதுரக் கிலோமீட்டர் பிரதேச பாதுகாப்பு வலயப்பகுதி இரண்டரைக் கிலோமீட்டராக மாற்றம்.. -இலங்கை இராணுவம் அறிவிப்பு!!

Read Time:1 Minute, 49 Second

mapdefence3இலங்கையின் வடக்கே பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப் பட்டிருந்த பகுதியில் இலங்கை அரசாங்கம் தற்போது மாற்றத்தை அறிவித்துள்ளது இதற்கு முன்பு வரையறுக்கப் பட்டிருந்த பாதுகாப்புப் பிரதேசமானது தற்போதைய நிலமைகளை கருத்தில் கொண்டு மாற்றியமைக்கப்பட்டது அங்குள்ள பொதுமக்கள் அடர்த்தியாக இருக்கும் பிரதேசங்களை கருத்தில் கொண்டு இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இராணுவம் கூறியுள்ளது. தற்போதைய நிலையில் கரையமுள்ளிவாய்க்கால் பகுதி உள்ளிட்ட நிலப்பகுதி புதிய பாதுகாப்பு வலயப்பகுதியாக வரையறுக்கப் பட்டுள்ளது. இரண்டு கிலோமீட்டர் நீளமும் ஒன்றரை கிலோமீட்டர் அகலமும் கொண்ட இந்தப் பகுதியானது புதிய பாதுகாப்பு வலயப்பகுதியாக வரையறுக்கப்பட்டது இதற்கு வெளியில் இருக்கும் பகுதிகளில் இராணுவம் தொடர்ந்தும் விடுதலைப்புலிகள் மீதான தாக்குதல்களை தொடரும் என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். ஆறு சதுரக் கிலோமீட்டர் பிரதேசம் பாதுகாப்பு வலயமாக விளங்கிவந்த நிலை மாறி தற்போது இரண்டரை சதுரக்கிலோமீட்டர் பகுதியாக இது குறைக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

One thought on “ஆறு சதுரக் கிலோமீட்டர் பிரதேச பாதுகாப்பு வலயப்பகுதி இரண்டரைக் கிலோமீட்டராக மாற்றம்.. -இலங்கை இராணுவம் அறிவிப்பு!!

  1. 1977 ம் ஆண்டு யூலை மாதம் 21ந் திகதி இடம்பெற்ற பொதுத் தேர்தலின்போது தமிழீழக் கோரிக்கையினை முன்வைத்து தமிழர் விடுதலைக் கூட்டணியினர் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமது வேட்பாளர்களை நிறுத்தியபோதும் அக்கோரிக்கை தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்டது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழ்ந்த 878,143 தமிழ் வாக்காளர்களில் 394,992 வாக்காளர்கள் மட்டுமே தமிழர் விடுதலைக் கூட்டணியினருக்கு வாக்களித்தனர். இத்தொகை மொத்த தமிழ் வாக்காளர்களில் 45% வாக்காளர்கள் மட்டுமே த.வி.கூட்டணியினருக்கு வாக்களித்தனர். ஒரு தனி இறைமை பெற்ற நாட்டினுள் ஒரு நாட்டினை அமைப்பதானால் குறைந்தபட்சம் 67%மக்களின் ஆதரவு பெறவேண்டியது கட்டாயமானதென்பதே சர்வதேச நியதியாகும்.
    தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் வடக்குகிழக்கில் இருந்த மூன்றில் ஒரு பங்கு தமிழர்கள் நாட்டைவிட்டு நிரந்தரமாக வெளியேறிவிட்டார்கள். இன்னுமொரு மூன்றில் ஒரு பங்கு அதிகமான தமிழர்கள் நிரந்தரமாக தெற்கில் குடியேறிவிட்டார்கள். வடக்கு கிழக்கில் மூன்றில் ஒரு பங்கு தமிழர்களே உள்ளனர்.
    இன்று அமெரிக்காவில் இருந்து கொண்டு முள்ளிவாய்க்கால் வன்னி மக்களின் பூர்வீக மண் என்று அறிக்கை விடலாம். இல்லாவிட்டால் 1976ம் ஆண்டு தமிமீழப் பிரகடனத்திற்கு ஒஸலோவிலும் லண்டனிலும் இருந்து கொண்டு வாக்களித்து அறிக்கை விடலாம். இந்த நரகத்தை உருவாக்கியவர்கள் தமது சொந்த வாழ்கையை நன்கு வாழ்ந்து விட்டார்கள். இந்த நரகத்தை உருவாக்கவும் தொடரவும் உதவிய புலன் பெயர் தமிழர் எந்தக் குறையும் இன்றி வாழ்கிறார்கள்.

Leave a Reply

Previous post அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குவதானால் அரச சார்பற்ற நிறுவனங்கள் இடம்பெயர்ந்தவர்களுக்கு உதவ அனுமதி
Next post கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கிப்பிரயோகத்தில் ஒருவர் பலி எண்மர்காயம்